சு.மணிகண்டன் மாவட்டச் செய்தியாளர் ,நாகப்பட்டி னம் வேளாங்கண்ணி அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியில் தொகுப்பு வீட்டின் காங்கிரெட் மேற்கூரை இடிந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வேட்டைக்காரனிருப்பு சடையன்காடு பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 350க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு இந்திரா குடியிருப்பு திட்டத்தின் முலம் 1987 ஆம் வருடம்60 வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது . தற்போது அனைத்து வீடுகளும் பழுதடைந்து காணப்படுகிறது .மேலும் மேற்கூரைகளின் சிமெண்ட் காரைகள் கீழேவிழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது இதனால் எப்ப இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையாக புது தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்