1914 பிப்ரவரி 24,ல்
பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி இன்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற வரலாற்று பொக்கிஷம் என்றால் மிகையாகது.
2,340 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் கடலுக்குள் அமைந்து இருக்கும் பாம்பன் தீவையும் இணைக்கிறது பாம்பன் ரயில் பாலம்.
நூறு ஆண்டுகளை கடந்தும் இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இந்த புதிய ரயில்வே தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகள் 1902-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
பல்வேறு இயற்கை சீற்றங்கள், தடைகளை கடந்து 11 ஆண்டுகளாக ரயில்வே தூக்குப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
பாம்பன் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்த பாலம் கட்டி 100 ஆண்டுகள் கடந்துவிட்டது.
ராமேஷ்வரம் கடலில் கப்பல்கள் வரும்போது இந்த பாலம் கப்பலுக்கு வழிவிடும் .
ஜெர்மனை சேர்ந்த ஷர்சர் என்ற பொறியியாளர்தான் இதனை கட்டியுள்ளார்.
இது போன்ற பாலத்தை இக்காலக்கட்டதில் கூட கட்ட இயலாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்