முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பி ஏ சி எல் நிறுவனம் ஏமாற்றிய வாடிக்கையாளரின் குறைந்த தொகை மட்டுமே தற்போது திரும்பும் நிலை

         பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணம் கட்டினோம்.
அந்த ஆபிஸ் சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. அதைப் பற்றி எழுதுங்கள் எனக் கோரிக்கை படி பி.ஏ.சி.எல் நிறுவனம் குறித்து விசாரித்துத் தரும் களத் தகவல்கள் இவை பி.ஏ.சி.எல் நிறுவனம், ஐந்து கோடி இந்தியர்களிடம் இருந்து சுமார் 49,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அரசாங்க அனுமதியோ, கண்காணிப்போ எதுவும் இல்லாமல், இந்த நிறுவனம், இதுவரை இந்தியாவில் நடந்ததிலேயே மிகப்பெரிய மோசடியை நடத்தியுள்ளது. சுமார் 25ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்ட ‘பேர்ல்ஸ் கோல்டன் ஃபாரஸ்ட்’ என்ற நிறுவனம், ரியல் எஸ்டேட் மீது முழுக் கவனத்தைப் பதித்தது. குறைந்தபட்சம் 160 ரூபாய் முதல் லட்சக்கணக்கில் ரூபாய் கட்டி, எதிர்காலத்தில் வீட்டு மனைகளைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என வாக்குறுதி கொடுத்தனர். அதனை நம்பி, லட்சக்கணக்கான மக்கள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டினர். அந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்டன. இதன் நம்பகத்தன்மையையும், அதிவேக வளர்ச்சியையும் சந்தேகித்த செபி (Securities and Exchange Board of India) ‘பி.ஜி.எஃப், ஒரு சட்டவிரோத நிறுவனம்’ என்று அறிவித்து, 1997-ல் தடையும் செய்தது. நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டுக்குச் சென்று சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். செபி, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டுக்குப் போனது. அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே ‘பேர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர் பி.ஏ.சி.எல். நிறுவனத்தினர். பி.ஜி.எஃப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அப்படியே இங்கு மடைமாற்றினார்கள். இதற்கு இடையில் உச்ச நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது. சி.பி.ஐ, கடந்த மார்ச் மாதம் பி.ஏ.சி.எல் நிறுவன இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றைச் சோதனையிட்டு, ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றது. மேலும், நிறுவனத்தின் சுமார் 1,000 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.
மக்களிடம் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டி தொழில் செய்யும் எந்த நிறுவனமும், பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான ‘செபி’யில் அனுமதி வாங்க வேண்டும். ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி திரட்டியும்கூட பி.ஏ.சி.எல் நிறுவனம், ‘செபி’யில் அனுமதி வாங்கவில்லை. ‘பி.ஏ.சி.எல்’ வசூலித்த ஒரு ரூபாய்கூட முறையான வழியில் திரட்டப்படவில்லை. முழுப் பணத்தையும் முதலீட்டாளர்களிடமே திருப்பித் தர வேண்டும்’ என உத்தரவிட்டது செபி. ஆனால்,அவர்கள் இதனை செய்யவில்லை. இப்போது வரை மக்கள் பணம் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்; பி.ஏ.சி.எல் நிறுவனமும் வாங்கிக்கொண்டே இருக்கிறது. இந்த மோசடி   வெளிவரத் தொடங்கியதுமே, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட இடங்களில், கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்டனர். மொத்தம் 33 லட்சம் ஏஜென்ட்கள் உள்ளனர். அவர்களுக்குச் சம்பளம் இல்லை மாறாக கமிஷன் மட்டுமே. ஒரு வாடிக்கையாளரை சேர்த்தால் 12சதவீத கமிஷன். இவர்கள் மூலமாக இன்னொரு வாடிக்கையாளர் சேரும்போது கூடுதலாக 2சதவீதம் கிடைக்கும். வாடிக்கையாளர் கட்டும் தொகையில் 40 சதவீதம் ஏஜென்ட்டுகளுக்கு கமிஷனாக போகிறது. கடந்த 4வருடமாக சரியாக முதிர்வுத் தொகையைத் தரவில்லை. அப்படி முதிர்வுத் தொகை கேட்டு பிரச்னை செய்தவர்களுக்கு மட்டும், பணத்தைக் கொடுத்து செட்டில் செய்துள்ளனர். ‘வசூலிக்கும் பணத்துக்கு ஏற்ப, வீட்டுமனை ஒதுக்கப்படும்’ என்றார்கள். தமிழ்நாட்டில் பணம் கட்டியவர்களுக்கு ஏதாவது ஒரு வட இந்திய மாநிலத்திலும், அங்கு கட்டியவர்களுக்கு இங்கு ஏதாவது ஓர் ஊரிலும் நிலம் ஒதுக்கியிருப்பதாகப் பத்திரம் தருவார்கள். அது என்ன ஊர், எங்கு இருக்கிறது என எதுவும் தெரியாது. இதை யாரும்  நேரில் சென்று பார்க்கப்போவதும் இல்லை. இதனால் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் கரங்கள் எங்கெங்கும் பரவிவிட்டன. அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் சிலரை தொடர்பு கொண்டு அவர்களிடம்  கேட்டபோது, ‘‘நான் கட்டுன 2 லட்ச ரூபாய்க்கு முதிர்வு காலம் 2013ல் முடிஞ்சு, இதுவரை பணம் தரலை. பதில் சொல்லக்கூட ஆபீஸ்ல ஆள் இல்லை. என்னைச் சேர்த்துவிட்ட ஏஜென்ட், இப்போ அங்கே வேலை பார்க்கலை!’’ என்று  கவலையுடன் தெரிவித்தார். ‘‘நீங்க தைரியமா பணம் கட்டுங்க. நம்பிக்கையான நிறுவனம்-னு ஏஜென்ட்டுங்க எல்லாரும் சொன்னாங்க. இங்கே இருக்குற ஆபீஸை மூடுறதும் திறக்குறதுமா இருக்குறாங்க. என்ன பண்றது,யாரைக் கேட்குறதுனு தெரியலை! இதுகுறித்து கொடுத்த புகார்கள் எல்லாம் கிடப்பில் கிடக்கிறது. பி.ஏ.சி.எல் சார்பில் கொடுக்கப்பட்ட டி.டி.க்கள் ரிட்டன் ஆனது. போராட்டம் நடத்தினோம்.  போலீஸ் ஆபீ்ஸர்கள் பி.ஏ.சி.எல்லுக்கு ஆதரவாக செயல்பட்டனர்’’ என்று ஆதங்கப்பாட்டார் தஞ்சைக்காரர் ஒருவர் 
கரூர் ஒருவர்  ‘‘எனக்கு வரவேண்டிய பணத்தைக் கேட்டு மூன்று வருஷமா அலைஞ்சுட்டிருக்கேன். முன்பு, சீக்கிரம் தந்துடுவோம்னு சொன்னாங்க. இப்போ, கம்பெனி மேல கேஸ் இருக்குனு சொல்றாங்க!’’ குளித்தலையைச் சேர்ந்த ஏஜென்ட் சங்கர், ‘‘ஆறு வருஷம் ஏஜென்ட்டா இருந்தேன். நான் மட்டுமே 40 லட்சம் வசூலிச்சுக் கட்டியிருக்கேன். மோசடினு செய்திகளைப் படிச்சப் பிறகு, கடந்த ஆறு மாசமா புது பாலிசி எதுவும் எடுக்கிறது இல்லை. கட்டுன வரைக்கும் பணத்தைத் திரும்பத் தரணும்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். உடனே என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க. என் மூலமா பணம் கட்டுனவங்க பணத்தைக் கேட்டு, வீட்டுக்கு வந்து என்னை நெருக்குறாங்க. நான் கடன்காரன் போல பதில் சொல்லுறேன். எனக்கு என்ன பண்றதுனு தெரியலை!’’ என தலையில் அடித்துக்கொண்டார். பிஏசிஎல்-க்கு ரூ.7269 கோடி அபராதம் – செபி  செபி வரலாற்றிலேயே அதிக அபராதத்திற்கு ஆளாகியுள்ளது பிஏசிஎல் நிறுவனம்தான்.. மொத்தம் 5.85 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.49,100 கோடி பணத்தைச் சுருட்டிய நிறுவனம் தான் பி.ஏ.சி.எல். ஜெய்ப்பூரைச் சேர்ந்த பி.ஏ.சி.எல் நிறுவனம், “கூட்டு முதலீட்டு திட்டங்கள்”-இன் கீழ், 15 ஆண்டுகளில் நிலங்கள் வாங்கித் தருவதாக கூறி 5.85 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து மொத்தம் ரூ. 49,100 கோடி பணத்தைத் திரட்டியது. அதனால் பிஏசிஎல்-க்கு ரூ. 7269 கோடி அபராதம் விதித்துள்ளது செபி .
பிஏசிஎல்-இன் நான்கு இயக்குனர்களும் -தர்லோச்சன் சிங், சுக்தேவ் சிங், குர்மீத் சிங் மற்றும் சுப்ரதா பட்டாசார்யா- முறைகேடாக ரூ. 2,423 கோடி லாபம் பெற்றுள்ளனர். செபி நிபந்தனைகளின் படி முறைகேடாக சேர்த்த லாபத்தின் மூன்று மடங்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  அன்று பி.ஜி.எஃப். இன்று பி.ஏ.சி.எல்!
விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களைத் தமிழகத்திலும் இந்தியா முழுக்கவும் இந்த நிறுவனம் கொஞ்சம் வாங்கியிருக்கிறது என்றாலும், இந்த நிலம் எப்போது மக்களுக்கு லாபத்தைத் தரும் என்கிற கேள்விக்குப் பதிலில்லை. மதுரைக்கு அருகே நிலத்தை வாங்கி அங்கு பி.ஏல்.சி.எல் பேல்ஸ் சிட்டி அமைத்து அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு உறுப்பினர்களுக்கு விற்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், அந்த இடத்தின் முகப்பில் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டதோடு சரி, வேறு எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் இந் நிறுவனம் விவசாய நிலங்களை வாங்கி விவசாய உற்பத்தி செய்வதாகச் சொல்கிறது. அதுபோல, இந்தியாவின் பல நகரங்களிலும் கட்டுமான வேலைகள் நடந்து வருவதாக இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சொல்லப்படுகிறது. உண்மையில் யாரும் இவற்றை நேரில் பார்த்ததில்லை. இந்நிறுவனத்தில் பணத்தை கட்டி நம்பிக்கை இழந்த ஆந்திர மக்கள் கட்டிய பணத்தைத் திரும்பத் தருமாறு கும்பலாக வந்து கேட்டனர். உடனே உஷாரான பி.ஏ.சி.எல் நிர்வாகம், வேறு மாநிலங்களிலிருந்து முதலீடாக வசூலான பணத்தை எடுத்து, ஆந்திர மக்களுக்கு உடனுக்குடன் தரவே, மக்களே அசந்துபோனார்களாம். ‘நல்ல நிறுவனத்தை தப்பா நினைச்சுட்டோமே’ என்று சொல்லி, மீண்டும் பணத்தைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். பிரச்னை வரும்போது இதுமாதிரி டெக்னிக்குகளை ஃபாலோ செய்து, தப்பிப்பது இதுமாதிரியான நிறுவனங்களுக்கு கைவந்த கலை என்கின்றனர் ஆந்திர மக்கள்.
ஆர்.பி.ஐ அனுமதி அவசியம்! இந்தியாவில் மக்களிடமிருந்து முதலீடுகளைத் திரட்டும் நிறுவனம் கட்டாயமாக, மத்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதியை பி.ஏ.சி.எல் நிறுவனம் இதுவரை பெறவில்லை. காரணம், நாங்கள் நிதி நிறுவனம் அல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனம்தான். எனவே அதற்கு அவசியம் இல்லை என்கிறது பி.ஏ.சி.எல் நிறுவனம். ஆனால், ஆர்.பி.ஐ.யிடம் அனுமதி பெறாத ஒரு நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்து, அதில் குளறுபடி நடக்கும்பட்சத்தில், ஆர்.பி.ஐ அதற்குப் பொறுப்பேற்காது. மக்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கின் அடிப்படையிலேயே அந்த முதலீட்டை மேற்கொண்டதாகவே கருதப்படும். காணாமல் போன தமிழகத்தின் அலுவலகம்! பி.ஏ.சி.எல் முறைகேடுகளை சிபி அமைப்பு கண்டுபிடித்த பிறகு, இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள், தாங்கள் பணம் கட்டி ஏமாந்தது குறித்தும், பணம் கட்டியதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என அறிவித்தார்கள். ஆனால் அதன்பிறகும்  பல இடங்களில் பி.ஏ.சி.எல் கிளை அலுவலகங்கள் சில மாதங்கள் செயல்பட்டன. அப்போது அவர்கள் செய்த மோசடித்தனங்கள், அவர்களிடம் அனைத்தையும் இழந்த வாடிக்கையாளர்கள், கட்டிய பணத்தை திரும்பி பெருவதற்கான வழிகள் உண்டா என்ற நிலையில் தான்பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணம் கட்டினோம். அந்த ஆபிஸ் சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. அதைப் பற்றி எழுதுங்கள் எனக் கோரிக்கை படி பி.ஏ.சி.எல் நிறுவனம் குறித்து விசாரித்துத் தரும் களத் தகவல்கள் இவை
பி.ஏ.சி.எல் நிறுவனம், ஐந்து கோடி இந்தியர்களிடம் இருந்து சுமார் 49,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அரசாங்க அனுமதியோ, கண்காணிப்போ எதுவும் இல்லாமல், இந்த நிறுவனம், இதுவரை இந்தியாவில் நடந்ததிலேயே மிகப்பெரிய மோசடியை நடத்தியுள்ளது. சுமார் 25ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்ட ‘பேர்ல்ஸ் கோல்டன் ஃபாரஸ்ட்’ என்ற நிறுவனம், ரியல் எஸ்டேட் மீது முழுக் கவனத்தைப் பதித்தது. குறைந்தபட்சம் 160 ரூபாய் முதல் லட்சக்கணக்கில் ரூபாய் கட்டி, எதிர்காலத்தில் வீட்டு மனைகளைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என வாக்குறுதி கொடுத்தனர்.
அதனை நம்பி, லட்சக்கணக்கான மக்கள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டினர். அந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்டன. இதன் நம்பகத்தன்மையையும், அதிவேக வளர்ச்சியையும் சந்தேகித்த செபி (Securities and Exchange Board of India) ‘பி.ஜி.எஃப், ஒரு சட்டவிரோத நிறுவனம்’ என்று அறிவித்து, 1997-ல் தடையும் செய்தது. நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டுக்குச் சென்று சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். செபி, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டுக்குப் போனது. அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே ‘பேர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர் பி.ஏ.சி.எல். நிறுவனத்தினர். பி.ஜி.எஃப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அப்படியே இங்கு மடைமாற்றினார்கள். இதற்கு இடையில் உச்ச நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது. சி.பி.ஐ, கடந்த மார்ச் மாதம் பி.ஏ.சி.எல் நிறுவன இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றைச் சோதனையிட்டு, ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றது. மேலும், நிறுவனத்தின் சுமார் 1,000 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. மக்களிடம் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டி தொழில் செய்யும் எந்த நிறுவனமும், பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான ‘செபி’யில் அனுமதி வாங்க வேண்டும். ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி திரட்டியும்கூட பி.ஏ.சி.எல் நிறுவனம், ‘செபி’யில் அனுமதி வாங்கவில்லை. ‘பி.ஏ.சி.எல்’ வசூலித்த ஒரு ரூபாய்கூட முறையான வழியில் திரட்டப்படவில்லை. முழுப் பணத்தையும் முதலீட்டாளர்களிடமே திருப்பித் தர வேண்டும்’ என உத்தரவிட்டது செபி. ஆனால்,அவர்கள் இதனை செய்யவில்லை. இப்போது வரை மக்கள் பணம் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்; பி.ஏ.சி.எல் நிறுவனமும் வாங்கிக்கொண்டே இருக்கிறது.
இந்த மோசடி   வெளிவரத் தொடங்கியதுமே, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட இடங்களில், கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்டனர். மொத்தம் 33 லட்சம் ஏஜென்ட்கள் உள்ளனர். அவர்களுக்குச் சம்பளம் இல்லை மாறாக கமிஷன் மட்டுமே. ஒரு வாடிக்கையாளரை சேர்த்தால் 12சதவீத கமிஷன். இவர்கள் மூலமாக இன்னொரு வாடிக்கையாளர் சேரும்போது கூடுதலாக 2சதவீதம் கிடைக்கும். வாடிக்கையாளர் கட்டும் தொகையில் 40 சதவீதம் ஏஜென்ட்டுகளுக்கு கமிஷனாக போகிறது. கடந்த 4வருடமாக சரியாக முதிர்வுத் தொகையைத் தரவில்லை. அப்படி முதிர்வுத் தொகை கேட்டு பிரச்னை செய்தவர்களுக்கு மட்டும், பணத்தைக் கொடுத்து செட்டில் செய்துள்ளனர். ‘வசூலிக்கும் பணத்துக்கு ஏற்ப, வீட்டுமனை ஒதுக்கப்படும்’ என்றார்கள். தமிழ்நாட்டில் பணம் கட்டியவர்களுக்கு ஏதாவது ஒரு வட இந்திய மாநிலத்திலும், அங்கு கட்டியவர்களுக்கு இங்கு ஏதாவது ஓர் ஊரிலும் நிலம் ஒதுக்கியிருப்பதாகப் பத்திரம் தருவார்கள். அது என்ன ஊர், எங்கு இருக்கிறது என எதுவும் தெரியாது. இதை யாரும்  நேரில் சென்று பார்க்கப்போவதும் இல்லை. இதனால் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் கரங்கள் எங்கெங்கும் பரவிவிட்டன.
அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் சிலரை தொடர்பு கொண்டு அவர்களிடம்  கேட்டபோது, ‘‘நான் கட்டுன 2 லட்ச ரூபாய்க்கு முதிர்வு காலம் 2013ல் முடிஞ்சு, இதுவரை பணம் தரலை. பதில் சொல்லக்கூட ஆபீஸ்ல ஆள் இல்லை. என்னைச் சேர்த்துவிட்ட ஏஜென்ட், இப்போ அங்கே வேலை பார்க்கலை!’’ என்று  கவலையுடன் தெரிவித்தார்.
‘‘நீங்க தைரியமா பணம் கட்டுங்க. நம்பிக்கையான நிறுவனம்-னு ஏஜென்ட்டுங்க எல்லாரும் சொன்னாங்க. இங்கே இருக்குற ஆபீஸை மூடுறதும் திறக்குறதுமா இருக்குறாங்க. என்ன பண்றது,யாரைக் கேட்குறதுனு தெரியலை! இதுகுறித்து கொடுத்த புகார்கள் எல்லாம் கிடப்பில் கிடக்கிறது. பி.ஏ.சி.எல் சார்பில் கொடுக்கப்பட்ட டி.டி.க்கள் ரிட்டன் ஆனது. போராட்டம் நடத்தினோம்.  போலீஸ் ஆபீ்ஸர்கள் பி.ஏ.சி.எல்லுக்கு ஆதரவாக செயல்பட்டனர்’’ என்று ஆதங்கப்பாட்டார் தஞ்சைக்காரர் ஒருவர் கரூர் ஒருவர்  ‘‘எனக்கு வரவேண்டிய பணத்தைக் கேட்டு மூன்று வருஷமா அலைஞ்சுட்டிருக்கேன். முன்பு, சீக்கிரம் தந்துடுவோம்னு சொன்னாங்க. இப்போ, கம்பெனி மேல கேஸ் இருக்குனு சொல்றாங்க!’’
குளித்தலையைச் சேர்ந்த ஏஜென்ட் சங்கர், ‘‘ஆறு வருஷம் ஏஜென்ட்டா இருந்தேன். நான் மட்டுமே 40 லட்சம் வசூலிச்சுக் கட்டியிருக்கேன். மோசடினு செய்திகளைப் படிச்சப் பிறகு, கடந்த ஆறு மாசமா புது பாலிசி எதுவும் எடுக்கிறது இல்லை. கட்டுன வரைக்கும் பணத்தைத் திரும்பத் தரணும்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். உடனே என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க. என் மூலமா பணம் கட்டுனவங்க பணத்தைக் கேட்டு, வீட்டுக்கு வந்து என்னை நெருக்குறாங்க. நான் கடன்காரன் போல பதில் சொல்லுறேன். எனக்கு என்ன பண்றதுனு தெரியலை!’’ என தலையில் அடித்துக்கொண்டார்.பிஏசிஎல்-க்கு ரூ.7269 கோடி அபராதம் – செபி
செபி வரலாற்றிலேயே அதிக அபராதத்திற்கு ஆளாகியுள்ளது பிஏசிஎல் நிறுவனம்தான்.. மொத்தம் 5.85 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.49,100 கோடி பணத்தைச் சுருட்டிய நிறுவனம் தான் பி.ஏ.சி.எல்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த பி.ஏ.சி.எல் நிறுவனம், “கூட்டு முதலீட்டு திட்டங்கள்”-இன் கீழ், 15 ஆண்டுகளில் நிலங்கள் வாங்கித் தருவதாக கூறி 5.85 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து மொத்தம் ரூ. 49,100 கோடி பணத்தைத் திரட்டியது. அதனால் பிஏசிஎல்-க்கு ரூ. 7269 கோடி அபராதம் விதித்துள்ளது செபி .
பிஏசிஎல்-இன் நான்கு இயக்குனர்களும் -தர்லோச்சன் சிங், சுக்தேவ் சிங், குர்மீத் சிங் மற்றும் சுப்ரதா பட்டாசார்யா- முறைகேடாக ரூ. 2,423 கோடி லாபம் பெற்றுள்ளனர். செபி நிபந்தனைகளின் படி முறைகேடாக சேர்த்த லாபத்தின் மூன்று மடங்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அன்று பி.ஜி.எஃப். இன்று பி.ஏ.சி.எல்! விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களைத் தமிழகத்திலும் இந்தியா முழுக்கவும் இந்த நிறுவனம் கொஞ்சம் வாங்கியிருக்கிறது என்றாலும், இந்த நிலம் எப்போது மக்களுக்கு லாபத்தைத் தரும் என்கிற கேள்விக்குப் பதிலில்லை. மதுரைக்கு அருகே நிலத்தை வாங்கி அங்கு பி.ஏல்.சி.எல் பேல்ஸ் சிட்டி அமைத்து அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு உறுப்பினர்களுக்கு விற்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், அந்த இடத்தின் முகப்பில் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டதோடு சரி, வேறு எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் இந் நிறுவனம் விவசாய நிலங்களை வாங்கி விவசாய உற்பத்தி செய்வதாகச் சொல்கிறது. அதுபோல, இந்தியாவின் பல நகரங்களிலும் கட்டுமான வேலைகள் நடந்து வருவதாக இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சொல்லப்படுகிறது. உண்மையில் யாரும் இவற்றை நேரில் பார்த்ததில்லை. இந்நிறுவனத்தில் பணத்தை கட்டி நம்பிக்கை இழந்த ஆந்திர மக்கள் கட்டிய பணத்தைத் திரும்பத் தருமாறு கும்பலாக வந்து கேட்டனர். உடனே உஷாரான பி.ஏ.சி.எல் நிர்வாகம், வேறு மாநிலங்களிலிருந்து முதலீடாக வசூலான பணத்தை எடுத்து, ஆந்திர மக்களுக்கு உடனுக்குடன் தரவே, மக்களே அசந்துபோனார்களாம். ‘நல்ல நிறுவனத்தை தப்பா நினைச்சுட்டோமே’ என்று சொல்லி, மீண்டும் பணத்தைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். பிரச்னை வரும்போது இதுமாதிரி டெக்னிக்குகளை ஃபாலோ செய்து, தப்பிப்பது இதுமாதிரியான நிறுவனங்களுக்கு கைவந்த கலை என்கின்றனர் ஆந்திர மக்கள்.
ஆர்.பி.ஐ அனுமதி அவசியம்! இந்தியாவில் மக்களிடமிருந்து முதலீடுகளைத் திரட்டும் நிறுவனம் கட்டாயமாக, மத்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதியை பி.ஏ.சி.எல் நிறுவனம் இதுவரை பெறவில்லை. காரணம், நாங்கள் நிதி நிறுவனம் அல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனம்தான். எனவே அதற்கு அவசியம் இல்லை என்கிறது பி.ஏ.சி.எல் நிறுவனம். ஆனால், ஆர்.பி.ஐ.யிடம் அனுமதி பெறாத ஒரு நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்து, அதில் குளறுபடி நடக்கும்பட்சத்தில், ஆர்.பி.ஐ அதற்குப் பொறுப்பேற்காது. மக்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கின் அடிப்படையிலேயே அந்த முதலீட்டை மேற்கொண்டதாகவே கருதப்படும். காணாமல் போன தமிழகத்தின் அலுவலகம்!பி.ஏ.சி.எல் முறைகேடுகளை சிபி அமைப்பு கண்டுபிடித்த பிறகு, இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள், தாங்கள் பணம் கட்டி ஏமாந்தது குறித்தும், பணம் கட்டியதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என அறிவித்தார்கள். ஆனால் அதன்பிறகும்  பல இடங்களில் பி.ஏ.சி.எல் கிளை அலுவலகங்கள் சில மாதங்கள் செயல்பட்டன. அப்போது அவர்கள் செய்த மோசடித்தனங்கள், அவர்களிடம் அனைத்தையும் இழந்த வாடிக்கையாளர்கள், கட்டிய பணத்தை திரும்பி பெருவதற்கான வழிகள் உண்டா என்ற நிலையில் தான் தற்போதுபிஏசிஎல் லிமிடெட் முதலீட்டாளர்களுக்கு நீதிபதி  (ஓய்வு) ஆர்.எம். லோதா கமிட்டி உரிமைகோரல் விண்ணப்பங்களின் நிலை மற்றும்  குறைபாடுகளை சரிசெய்வதற்கான கடைசி தேதியாக ஜூலை 31, 2020 ஆகும்
நீதிபதி (ஓய்வு) ஆர்.எம். லோதா கமிட்டி (பிஏசிஎல் லிமிடெட்) இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (“செபி”) அமைக்கப்பட்ட ஒரு குழு ஆகும், இது 02.02.2016 ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட  உத்தரவுகளின் படி சுப்ரதா பட்டாச்சார்யா இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் வழக்கு (C.A எண்: 13301/2015) மற்றும் நீதிபதி (ஓய்வு) ஆர்.எம்.லோதா பிஏசிஎல் லிமிடெட் சொத்துக்களை விற்றதற்காகவும், விற்பனை வருமானத்தை பிஏசிஎல் லிமிடெட்டில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும் அமைக்கப்பட்ட நீதிபதி  லோதா.
பி.ஏ.சி.எல் முதலீட்டாளர்களுக்கு தற்போது ரூ. 5,000 / - மற்றும் இன்று வரை 3,81,603 அத்தகைய முதலீட்டு விண்ணப்பதாரர்கள் செலுத்தியுள்ளனர். இருப்பினும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் காரணமாக சில பயன்பாடுகளை மேலும் செயல்படுத்த முடியவில்லை. அதன்படி, முதலீட்டாளர்களில்  விண்ணப்பதாரர்கள் ரூ. 5,000 / - இந்த இணையதளத்தில் (sebipaclrefund.co.in) ஆன்லைனில் தங்கள் உரிமைகோரல் விண்ணப்பங்களின் நிலையை இன்று பிஏசிஎல் லிமிடெட் முதலீட்டாளர்களுக்கு செபி புதன்கிழமை ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ .5,000 க்கும் அதிகமான உரிமைகோரலைக் கொண்ட முதலீட்டாளர்கள், அவர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலையைக் காணலாம் மற்றும் படிவத்தில் ஏதேனும் தவறுகளைச் சரிசெய்யலாம், அதன் பிறகு சந்தை சீரானதும் பணத்தைத் திரும்பப் பெற முடியும். விண்ணப்பத்தை முதலீட்டாளர் களால் பார்க்க முடியும்… சரிபார்க்கவும், குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை சரிசெய்யவும் கோரப்படுகிறது. உரிமைகோரல் விண்ணப்பங்களின் நிலை மற்றும்  குறைபாடுகளை சரிசெய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2020 ஆகும்.அதன்பின் மற்ற கூடுதல் தொகை செலுத்தியநபர்களின் பணம் திரும்பி வரும் விபரம் அறியமுடியும் எனத் தெரிகிறது தற்போதுபிஏசிஎல் லிமிடெட் முதலீட்டாளர்களுக்கு நீதிபதி  (ஓய்வு) ஆர்.எம். லோதா கமிட்டி உரிமைகோரல் விண்ணப்பங்களின் நிலை மற்றும்  குறைபாடுகளை சரிசெய்வதற்கான கடைசி தேதியாக ஜூலை 31, 2020 ஆகும்நீதிபதி (ஓய்வு) ஆர்.எம். லோதா கமிட்டி (பிஏசிஎல் லிமிடெட்) இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (“செபி”) அமைக்கப்பட்ட ஒரு குழு ஆகும், இது 02.02.2016 ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட  உத்தரவுகளின் படி சுப்ரதா பட்டாச்சார்யா இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் வழக்கு (C.A எண்: 13301/2015) மற்றும் நீதிபதி (ஓய்வு) ஆர்.எம்.லோதா பிஏசிஎல் லிமிடெட் சொத்துக்களை விற்றதற்காகவும், விற்பனை வருமானத்தை பிஏசிஎல் லிமிடெட்டில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும் அமைக்கப்பட்ட நீதிபதி  லோதா. பி.ஏ.சி.எல் முதலீட்டாளர்களுக்கு தற்போது ரூ. 5,000 / - மற்றும் இன்று வரை 3,81,603 அத்தகைய முதலீட்டு விண்ணப்பதாரர்கள் செலுத்தியுள்ளனர். இருப்பினும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் காரணமாக சில பயன்பாடுகளை மேலும் செயல்படுத்த முடியவில்லை. அதன்படி, முதலீட்டாளர்களில்  விண்ணப்பதாரர்கள் ரூ. 5,000 / - இந்த இணையதளத்தில் (sebipaclrefund.co.in) ஆன்லைனில் தங்கள் உரிமைகோரல் விண்ணப்பங்களின் நிலையை இன்று பிஏசிஎல் லிமிடெட் முதலீட்டாளர்களுக்கு செபி புதன்கிழமை ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ .5,000 க்கும் அதிகமான உரிமைகோரலைக் கொண்ட முதலீட்டாளர்கள், அவர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலையைக் காணலாம் மற்றும் படிவத்தில் ஏதேனும் தவறுகளைச் சரிசெய்யலாம், அதன் பிறகு சந்தை சீரானதும் பணத்தைத் திரும்பப் பெற முடியும். விண்ணப்பத்தை முதலீட்டாளர் களால் பார்க்க முடியும்… சரிபார்க்கவும், குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை சரிசெய்யவும் கோரப்படுகிறது. உரிமைகோரல் விண்ணப்பங்களின் நிலை மற்றும்  குறைபாடுகளை சரிசெய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2020 ஆகும்.அதன்பின் மற்ற கூடுதல் தொகை செலுத்தியநபர்களின் பணம் திரும்பி வரும் விபரம் அறியமுடியும் எனத் தெரிகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...