சு.மணிகண்டன்,மாவட்டச் செய்தியாளர்,நாகப்பட்டினம் நாகையில் சுமைதூக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தால் நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி உணவுத்துறையை கண்டித்து 4ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு. சமீபத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி நாகை மாவட்டத்தில் அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கமும், பணி மாறுதலும் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாகை மாவட்டத்தில் 284 நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் 5000க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் நேரடி நெல்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் கடைமடை விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே, பணி நீக்கம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால் ,வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து தமிழகம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக., தொமுச, பொது செயலாளர். வள்ளுவன் தெரிவித்தார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்