தமிழ் பெயர் பலகை குறித்த அரசாணையை அமல்படுத்த கோரிய வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது அரசு அலுவலகங்கள், தனியார் கடைகளின், பெயர் பலகையை தமிழில் எழுத வேண்டும் என்ற தமிழக அரசாணையை அமல் படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அதில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,தனியார் கடைகள்,தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள்,கடைகளில் தமிழக அரசின் அரசாணை படி தூய தமிழில் பெரிய அளவிலும்,அதற்கு கீழே சிறிய அளவில் பிற மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும்,ஆனால், இந்த அரசாணையை முறையாக அமல்படுத்தாததால், கடைகளில், ஸ்டோர்ஸ், பேக்கரி, மெடிக்கல் ஷாப், என ஆங்கில வார்த்தைகளை பெரிதாக தமிழில் எழுதி உள்ளனர் என்றும், இவைகளை மாற்றி அங்காடி, அடுமணை, மருந்து கடை, என. தமிழில் எழுத உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பான அரசாணையை அமல் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர், மார்ச் 8 ல் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைப்பு இச் சூழலில் அமைச்சர் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் கடும் அபராதம் என எச்சரிக்கை தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் பெயர் பலகை அமைக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்