சந்தன வீரப்பன் மகளும் காடுவெட்டி குரு மகனும் வன்னியர் வாக்கு வங்கியா? சுய பாதுகாப்புக்காக பா ஜ க வில் இணைப்பா
சந்தனமரங்களைக் கடத்தி அரசால் சுடடுக்கொல்லப்பட்ட வீரப்பனின் மகள் பாஜகவில் இணைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் மகள் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். வீரப்பன் மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் விஜயலட்சுமி, வித்யா ராணி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி வழக்குறைஞராக உள்ளார். இவர் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த விழாவில் வீரப்பனின் 2வது மகள் வித்யா தவறான வழியைத் தேர்வு செய்தாலும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது தந்தை கொள்ளகையாகக கொண்டிருந்தார்...?.!. இதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை ....?செய்ய வேண்டும் என்பதால் பாஜகவில் நான் இணைத்திருக்கிறேன் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பாஜக இருக்கும் வரை தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியாது. ஸ்டாலின் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்றும் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் முரளிதர ராவ் குறிப்பிட்டார். சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் அவரது மகள் தற்போது இணைந்துள்ளார் அதுபோல் காடுவெட்டி குரு மகன் இணைந்துள்ளார் நடிகை நமீதா உள்பட பலர் சேர்வது கட்சிக்குப் பலன் தருமா என்பது அரசியல் பார்வையாளர்கள் கேள்வியாகும் பா ஜ க வில் அதிகம் வன்னியர்களை இணைப்பதால் பா ம க கூட்டனியில் விரிசல் வருமோ எனவும் விவாதம் நடக்கிறது
கருத்துகள்