பதிவுச்சான்றில்லாமல் திருட்டு இருசக்கர வாகனம்
ஸ்டெர்லைட் போராளி கைது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார்? என்று கேள்வி கேட்ட சந்தோஷ் என்ற நபர் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் சாம்குமார். இவரது எமஹா ஆர்.ஒன் 5 என்ற வண்டி வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதை தூத்துக்குடி சரவணன், விஜி ஆகிய இரண்டு திருடர்கள் திருடிச்சென்ற பின் வாகனம் விற்பனைக்கு இருப்பதாக OLX விளம்பரம் வெளியிட்டதைப்
பார்த்த ஸ்டெர்லைட் போராளி சந்தோஷ் அவனது கூட்டாளி மணி ஆகிய இருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வண்டியய திருடப்பட்டு என அறிந்தே பதிவுச் சான்றில்லாமல் ரூ 17 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர்.
இதற்கிடையே வண்டியைப் பறிகொடுத்த சாம்குமாரும் இந்த OLX விளம்பரத்தை பார்த்து குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது திருடர்கள் பைக் விற்பனையாகிவிட்டது என்று தெரிவித்தவுடன் யாரிடம் விற்பனை செய்யப்பட்டது ? நான் அதிகவிலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறேன் என்று கூறி, பைக் வாங்கியவர்களின் விபரத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு
வாங்கிய சந்தோஷைத் தொடர்பு கொண்டு பேசியதில் அவரிடம் வண்டி இருப்பது உறுதி செய்த பின் தூத்துக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அதன்படி சந்தோஷ், மணி, சரவணன் ஆகிய மூன்று பேரையும் வணடியைக் கைப்பற்றி குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினர் விஜி என்பவனைத் தேடி வருகின்றனர்.
சந்தோஷ் என்பவன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது,மருத்துவமணை வந்த நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டவர் எனற தகவல் வர இப்போது அவரது ரசிகர்கள் 'அவர் நடிகர் நீ திருடன்' என பதிவுகள் செய்கின்ற நிலை அது எப்படி ஒன்றரை லட்ச ருபாய் வண்டி ஒண்ணும் புரியாம 17,000 ரூபாய்க்கு வாங்குவானுங்க? திருட்டு எனத் தெரிந்தே செய்த குற்றம்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்