மருதுமன்னர்கள் வெள்ளோட்டம் கண்ட தேர் ஜமீன்தார் குடும்பக் கைங்கர்யத்தால் புதுப்பித்து தேரோட்ட விழாபாண்டிய நாட்டின் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களில் முக்கியமான தலம் திருக்கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோவில்.
சிவகங்கையில் இருந்து 18 கி.மீ தொலைவிலும் காரைக்குடியில் இருந்து 36 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இதன் பண்டைய பெயர் கானப்பேரெயில் எனவும், திருக்கானப்பேர் எனவும்,தலையிலங்கானம் என்றும் சங்க காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.கிபி பதினாறாம் நூற்றாண்டில் இருந்து சோமநாதமங்கலம் என அழைக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து சிங்கள படைகளை வென்று ஆண்ட தலைவன் வேங்கை மார்பன். இன்று, காளையார் கோவில் என வழங்குமிடத்தே, ஆழ்ந்த, அகழியினையும், வானளாவிய கெடிய மதில்களையும அடர்ந்த காவற் காட்டினையும் அமைத்து அவன் உருவாக்கிய கானப் பேரெயில் பகைவர் பற்றற்கரிய பேரரணாய் அமைந்தது.
வேங்கை மார்பனின சிறப்பினைக் கண்டு மனம் பொறாத கடைச்சங்க கால பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி பெரும் படையுடன் கானப் பேரெயிலை முற்றிகை யிட்டான். வேங்கை மார்பனை வென்றான். பற்றற்கரிய கானப் பேரெயிலைக் கைப்பற்றினான். கொல்லன் உலைக்களத்தே சிவக்கக் காய்ந்த இரும்பு உண்ட நீரை மீண்டும் பெறல் இயலாது என வேங்கை மார்பன் மனம் வருந்தினான்.கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனும் சிறப்பினையும் பெற்றான். அதன் பின் திருப்பணியாகஒன்பது நிலை பெரிய கோபுரம், மருது பாண்டியர்களால் எடுக்கப் பெற்றதாகும். கிழக்கு கோபுர நிலையில் மருதுபாண்டியர்களின் திருவுருவங்கள் காணப்பெறுவதோடு அழகிய அன்னப்பறவைகளால் உருவான கொடிக்கருக்கு வேலைப்பாடு காணப்பெறுகின்றது. ஒன்பது நிலை கிழக்குக் கோபுரத்தின் மேலேறிப் பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும் என்பர். ‘‘மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருதுபாண்டியன் வாராண்டி’’ எனும் கும்மிப் பாட்டு இவ்வட்டாரத்தில் வழங்கி வருகின்றது.
மேலும்,
‘‘கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கோயில் உண்டு பண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி’’
- போன்ற குறிப்புகளும் பழம் பாடல்களில் காணப்பெறுகின்றன. கோயில் முன் மண்டபத்தை இவர்கள் எடுப்பித்ததோடு பெரியதொரு திருத்தேரினையும் செய்தளித்தனர். கோயில் பராமரிப்புக்காக நாற்பது கிராமங்களையும், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகளையும் இக்கோயிலுக்கென அளித்துள்ளனர். கி.பி. 1789லிருந்து 1794ம் ஆண்டுக்குள் அவர்கள் தம் காளையார் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன அதன் பின் தேர் வெள்ளோட்டமே சிறப்பு அதை கோவி மணிசேகரன் காளையார்கோவில் ரதம் என கதையாகவே வடித்துள்ளார் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஜன.,30 அன்று காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சொர்ணகாளீஸ்வரர் உடனாய அம்பாள் பெரிய தேரிலும், சொர்ணவள்ளி மற்றொரு தேரிலும், விநாயகர் சிறு தேரில் எழுந்தருளினர்.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து இரவு 7:00 மணிக்கு நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று தீர்த்தவாரி, சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறுகிறது. இரவு சுவாமி புறப்பாடுடன் தைப்பூச விழா நிறைவு பெறும். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாலசரவணன்,கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மருதுசோதர்கள் காலத்திற்குப் பின் மன்னர் துரைசிங்கம் ராஜா அவர்கள் காலத்திற்குப் பின் தேவகோட்டை ஜமீன்தார் அரு குடும்பத்தார்கள் திருப்பணிகள் பல சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செய்து வரும் நிலையில் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஜன.,30 அன்று காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சொர்ணகாளீஸ்வரர் உடனாய அம்பாள் பெரிய தேரிலும், சொர்ணவள்ளி மற்றொரு தேரிலும், விநாயகர் சிறு தேரில் எழுந்தருளினர்.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து இரவு 7:00 மணிக்கு நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று தீர்த்தவாரி, சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறுகிறது. இரவு சுவாமி புறப்பாடுடன் தைப்பூச விழா நிறைவு பெறும். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாலசரவணன்,கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கருத்துகள்