திருப்புத்துார் வழியாக செல்லும் மேலுார்-- காரைக்குடி நான்கு வழிச்சாலைக்கான பணி துவக்கப்பட்டுள்ளது.மேலுாரிலிருந்து திருப்புத்துார், பிள்ளையார்பட்டி வழியாக காரைக்குடிக்கு புதிய நான்கு வழிச் சாலை அமைப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் சுமார் 750 கோடி செலவில் இப்பகுதியில் தொழில், சுற்றுலாஅபிவிருத்திக்காகவும், 2027 ல் இந்த ரோட்டில் 8 மடங்கு வாகனங்கள் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதாலும் இத்திட்டம்அறிவிக்கப்பட்டது. 46.8 கி.மீ., நீளமுள்ள இந்த நான்கு வழிச்சாலையில் சுமார் 100 கி.மீ.வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப் படுகிறது.திருப்புத்துார் மற்றும் பிள்ளையார்பட்டியில் புறவழிச்சாலையும், திருப்புத்துார் ஒன்றியம் பிராமணம்பட்டியில் டோல்கேட்டும் அமைக்கப்பட உள்ளது.திட்டப்பணிகளை ஜே.எஸ்.ஆர்.இன்ப்ரா டெவலப்பர்ஸ் பி.,லிட் நிறுவனத்தினர் நிறைவேற்ற உள்ளனர். தொழிலாளர்கள் தங்கவும், அலுவலக, கிடங்கு வசதிக்காக காட்டாம்பூரில் கட்டுமானப் பணிகள்துவக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கான நிலமெடுப்பு முடிந்து தற்போது முழு வீச்சில் இழப்பீடு வழங்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.முதல் கட்டப்பணிகளாக மேலுார் அருகே நான்குவழிச்சாலையில் சிவகங்கை செல்லும் பாலத்தின் அருகே ஜீரோ பாயிண்டில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதன் மூலம் மேலுார்--காரைக்குடிசெல்ல வழக்கமான துாரமான 52 கி.மீ.,யில் 5 கி.மீ., குறைய வாய்ப்புள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்