முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பலான வழியில் பலரைச் சிக்கவைத்த பலகுரல் பேர்வழி சிக்கினான்

      பிரியா, பிரியதர்ஷினி என்ற பெயர்களில்  சென்னை காவல்துறைக்கு பல  இ-மெயிலில் புகார்கள் குவிந்தன. மயிலாப்பூர் காவல் சரகத்தில் மட்டும் 170 பேர் ஆன்லைனில் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகார்கள் அனைத்தும் பிரியா, பிரியதர்ஷினி என்ற பெயர்களிலேயே இருந்தன. ஆனால் செல்போன் நம்பர்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தன. அதைப் பார்த்த மயிலாப்பூர் போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது. புகார் கொடுத்த செல்போன் நம்பர்களுக்கு போலீஸார் போன் செய்து விசாரித்தனர். அப்போது எதிர்முனையில் பேசியவர்கள், நாங்கள் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை என்று கூறினர்.
ஆனால், சென்னை காவல்துறைக்கு பிரியா, பிரியதர்ஷினி என்ற பெயர்களில் தொடர்ந்து ஆன்லைனில் புகார்கள் மட்டும் வந்து கொண்டிருந்தன. இதையடுத்து சென்னை மதுரவாயல் முகவரியைச் சேர்ந்த ஒருவர், பெண் ஒருவரால் பாதிக்கப்பட்டதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு மயிலாப்பூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரும் நான் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை என்று கூறினார். ஆனால், இந்தமுறை போலீஸார், `நீங்கள் உடனடியாகக் காவல் நிலையத்துக்கு வாருங்கள், உங்களிடம் விசாரிக்க வேண்டும்' என்று கூறினர். இதையடுத்து மதுரவாயலைச் சேர்ந்த நபர் மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோரிடம் விசாரணைக்காக ஆஜரானார்.
போலீஸாரின் விசாரணை தொடர்பாக, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மதுரவாயல் வாலிபர் கொடுத்த புகாரில் ``நான் அண்ணாநகரில் உள்ள லிப்ட் கம்பெனியில் டெக்னீசியனாகப் பணியாற்றிவருகிறேன். 19.2.2020-ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து வழக்கு விசாரணைக்காக எனக்கு அழைப்பு வந்தது. நான் அதுசம்பந்தமாக காவல் நிலையத்தில் ஆஜரானேன். போலீஸாரிடம் நான் எந்தப்புகாரும் ஆன்லைனில் கொடுக்கவில்லை என்று கூறினேன்.
தொடர்ந்து போலீஸார் என்னிடம் விசாரித்தனர். அப்போது நான் 16.2.2020-ல் நான் யூடியூப் பார்த்தபோது ஒரு செயலியின் லிங்க் வந்தது. அதை டவுன்லோடு செய்தேன். அந்தச் செயலியில் வேலைவாய்ப்பு தொடர்பாக தேடிக்கொண்டிருந்தேன். சில மணிநேரம் கழித்து பிரியா என்ற பெயரில் பெண் ஒருவர் பேசினார். அவர் என்னிடம், பெண்களின் புகைப்படங்கள் தன்னிடம் உள்ளன. அதை அனுப்ப 100 ரூபாய் அனுப்புமாறு கேட்டார். நான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறி இணைப்பைத் துண்டித்தேன்.


பிறகு பிரியா, தன்னுடைய செல்போன்களிலிருந்து எனக்கு தொடர்ந்து போன் செய்தார். மேலும் குறுஞ்செய்தி, போன் கால் செய்து தொல்லை கொடுத்தார். தொல்லை தாங்க முடியாமல் ஆன்லைனில் 100 ரூபாய் அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெண்ணின் புகைப்படம் வந்தது. மீண்டும் அந்தப் பெண், வீடியோ அனுப்ப 1,500 ரூபாய் கேட்டார். நீங்கள் யார், நேரில் வாங்க என்று கூறி என்னால் பணத்தை அனுப்பமுடியாது என்று கூறினேன். அதன்பிறகுதான் என்னுடைய செல்போன் நம்பரை பதிவு செய்து காவல் துறை இணையதளத்தில் ஆன்லைனில் புகார் கொடுத்துள்ளார். எனவே எனக்கு தொல்லை கொடுத்த பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார
மதுரவாயலைச் சேர்ந்த வாலிபர் கொடுத்த புகாரின்பேரில் பிரியா யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது பிரியா என்ற பெயரில் போனில் பேசியது நெல்லை மாவட்டம், பனங்குடியைச் சேர்ந்த வளன் ராஜ்குமார் ரீகன் என்று தெரியவந்தது. வளன் ராஜ்குமார் ரீகன், செல்போனில் பெண் குரலில் பேசி பலரை ஏமாற்றியதை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் அவரின் வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் இருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷனர் தேஸ்முக், உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வளன்ராஜ்குமாரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் எனப் பல இடங்களில் உள்ளவர்களிடம் வளன்ராஜ்குமார் பெண் குரலில் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.
இவர், இன்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்துவந்துள்ளார். பின்னர் இந்தச் செயலி மூலம் கடந்த 3 ஆண்டுகளாக மோசடி வேலையில் ஈடுபட்டுவருகிறார். வளன்ராஜ்குமாரின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வளன் ராஜ்குமார் ரீகன் பயன்படுத்திய செயலியின் நோக்கம் `நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமா, தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா..,அப்படியென்றால் இந்தச் செல்போன் நம்பருக்குப் பேசுங்கள்' என்பதுதானாம்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...