சிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர்,
இந்து மதத்தினரால் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மாசி மாதம் வரும் சிவராத்திரியை விமர்சையாக மகா சிவராத்திரி என அடையாளப்படுத்தி இந்து மதத்தினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மகாசிவராத்திரியின்போது சிவ ஆலயங்களுக்குச் சென்று மக்கள் வழிப்படுவதும், பெரும்பாலான மக்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிப்படுவதையும் இந்து மதத்தினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சிவராத்திரி இரவு சிவ மந்திரங்களைக் கூறுவதும், பூஜைகள் மேற்கொள்வதும் என அதை ஒரு கொண்டாட்டமாகவே மாற்றி, ஆன்மீக கூட்டங்களை விடியக் காலை வரை நடத்துவர்.
தமிழ்நாடு முழுவதும் சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகக் கன்னியாகுமரியில் சிவராத்திரி தினத்தில் சிவாலய ஓட்டம் என்ற நிகழ்வு நடக்கும். அதாவது கன்னியாகுமரியில் உள்ள 12 சிவன் கோயில்களுக்குப் பக்தர்கள் ஓடிச் சென்று வழிப்படுவார்கள்.
இந்த வருடம் சிவாலய ஓட்டம் நேற்று மாலை தொடங்கியது. மக்கள் கைகளில் விசிறியை வைத்துக் கொண்டு காவி வேஷ்டியைக் கட்டிக் கொண்டு ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று சாமியைத் தரிசித்து வருகின்றனர்.
திக்குறிச்சி, திற்பரப்பு என 12 சிவாயலங்களில் இந்த வழிபாடு நடக்கும். இந்த பயணம் தூரம் 108 கீமி ஆகும். இந்த நிகழ்விற்காகப் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் அந்த உத்தரவில் இந்த நாளுக்குப் பதிலாக மார்ச் மாதம் 28ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் உற்சாகமடைந்து நிம்மதியாக வழிப்பாட்டுகளைச் செய்து வருகின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்