பேருந்து முன்னிருக்கைகளில் பெண்கள் அமரும் நிலையில் ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாட்டை விதித்தது நிர்வாகம்
பேருந்தின் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம், பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் பேசக் கூடாது. விதியை மீறி நடந்தால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பேருந்துகளில் முன்பக்க சீட்டில் அமரும் பெண்களிடம் ஓட்டுனர்கள் பேசக்கூடாது என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கழகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேரங்களில் பேருந்து முன்பக்க சீட்டில் நடத்துனர்கள் அமர அறிவுறுத்தப்பட்டுள்னர்.
இந்தநிலையில் பகல் நேரங்களில் ஓட்டுனர்கள் பெண்களை பேருந்து முன்பக்கம் இருக்கும் நடத்துனர் இருக்கை மற்றும் பேனட்டில் அமர அனுமதித்து, அவர்களுடன் பேசிக்கொண்டே செல்வதால் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதை பரிசீலனை செய்த கோவை மாவட்ட போக்குவரத்து கழகம், பேருந்தின் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம், பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் பேசக் கூடாது என்றும் அவ்வாறு விதியை மீறி நடந்தால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பேருந்து முன்பக்க இருக்கைகளில் பெண்கள் அமர தற்போது அனுமதிக்கப்படவில்லை. முன்னால் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஓட்டுனர்கள் பேசிக்கொண்டே சென்று முக்கிய நிறுத்தங்களில் கூட பேருந்தை நிறுத்தாமல் செல்வதாலும்,பயணிகள் ஏறுவதையும் இறங்குவதையும் முறையாக கவனிக்காமல் பேருந்தை இயக்குவதாலும் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவே இதுபோன்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரைப்பட நகைச்சுவை உண்மையானது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்