முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசு நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்வதே குடிமக்களின் சிறப்பு

        குடியுரிமை (citizenship) என்பது, சிறப்பாக ஒரு நாட்டின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறிக்கும். இவ்வுரிமையில் அந்நாட்டு அரசியலில் பங்குகொள்ளும் உரிமையும் அடங்கும். குடியுரிமை சமூக ஒப்பந்தக் கொள்கையின் அடிப்படையில் சில பொறுப்புகளையும், கடமைகளையும் குடிமக்களிடத்தில் எதிர்பார்க்கிறது. பல நாடுகளில் குடியுரிமை அற்றவர் அந்நாட்டுத் தேசிய இனத்தவராகக் கருதப்படுவது இல்லை என்பதுடன் அவர் ஒரு வெளியாராகவே கணிக்கப்படுகிறார். ஒரு நாட்டின் குடியுரிமை கொண்டிருப்பவர் அந் நாட்டைச் சாராத தேசிய இனத்தவராகவும் இருக்கக்கூடும். எடுத்துக் காட்டாக, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர் அமெரிக்கக் குடிமகனாகக் கருதப்பட்டாலும், தேசிய இன அடிப்படையில் அவர் ஒரு இந்தியத் தேசிய இனத்தவராகக் கணிக்கப்படலாம். தேசிய இனம் என்பது, பிறந்த இடம், பெற்றோர், இனம் ஆகியவற்றில் தங்கியிருக்க, குடியுரிமை என்பது ஒரு சட்டம் சார்ந்த தொடர்பாகவே உள்ளது. குடியுரிமை இழக்கப்படவோ பெற்றுக் கொள்ளப்படவோ கூடியது. ஒரு நாட்டில் பிறத்தல், குறிப்பிட்ட நாட்டுக் குடியுரிமை கொண்ட ஒருவரை திருமணம் செய்தல் போன்றவை சில நாடுகளில் ஒருவருக்குக் குடியுரிமையைப் பெற்றுத்தரக்கூடும்.
குடிமகன்(Citizen) என்ற தகுதி, இறையான்மையுள்ள நாட்டின் அரசியல் சட்டத்தால், கடமைகளும் பொறுப்புகளும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் குடிமகன் என்ற தகுதி அடைந்தவர்களுக்கு அந்நாட்டில் குடியுரிமை, வாழ்வுரிமை, வாக்குரிமை, வேலை செய்யும் உரிமை, சொத்துக்கள் வாங்கும் உரிமை, தான் வாழும் நாட்டின் அரசிற்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரம், வெளிநாடுகளிடருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பும் உரிமை போன்ற உரிமைகள் கிடைக்கும்.
மேலும் குடிமகன்களுக்கு தன் நாட்டின் சட்ட திட்டங்களை பின்பற்றுதல், வரி செலுத்துதல் மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சியில் ஈடுபடுதல் போன்ற கடமைகளும் பொறுப்புகள் உள்ளது.பல்வேறு காரணங்களால் ஒரு நபர் ஒரு நாட்டின் குடிமகனுக்குரிய தகுதிகள் அடைகிறார். ஒரு நாட்டின் பெற்றோர்களுக்கு பிறப்பதாலும், வேறு நாட்டின் குடியுரிமையுள்ள ஆடவனையோ அல்லது பெண்னையோ மணப்பதாலும் அந்நாட்டின் குடிமகன் எனும் தகுதி கிடைக்கிறது.தேசியக் குடியுரிமை
சிந்தனையாளர் ஸ்டார்க், ஒரு தேசத்தின் அரசு, தனி நபர்கள் அடங்கிய ஒட்டுமொத்த மக்களின் முடிவுகளை, செயல்பாடுகளை, நலன்களை சட்ட ரீதியாக பாதுகாக்கிறது. இவ்வாறு அரசின் பாதுகாக்கிறது. இவ்வாறு அரசின் பாதுகாப்புக்கு உரியவர்கள், குடிமக்கள் ஆவர்என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் அரசுடன் மக்களுக்கு தொடர்பு உள்ளது. பாதுகாப்பை எதிர்பார்பது மக்களின் உரிமை ஆகும். அதே நேரத்தில் நாட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற பென்விக் வரையறை செய்துள்ளார்.குடியுரிமைக்கும் இருப்பிடத்தில் வசிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு
 பிறப்பின் அடிப்படையில்
ஒரு நபர் எந்த நாட்டின் தேசிய உரிமை அவருக்கு கிடைக்கிறது. பிறப்பின் வாயிலாக பெற்றோரின் தேசிய உரிமை கிடைக்கின்ற சாத்தியம் உள்ளது.
இயல்பு நிலை வாயிலாக தேசிய உரிமைக் கிடைக்கக் கூடும். ஒருவர் வெளிநாடு ஒன்றில் நீண்ட காலம் வசித்து வந்தான், அந்த நாட்டின் குடியுரிமையை அவர் பெறுகிறார். இது இயல்பின் அடிப்படையிலான தேசியக் குடியுரிமை என்று சொல்லப்படுகிறது.
நோட்டிபாம் வழக்கு
1881-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர், பிரடரிக் நோட்டிபாம். 1905-ம் ஆண்டு கவுதமாலாவுக்கு சென்றார். பிறப்பின் அடிப்படையில் அவர் ஜெர்மன் குடியுரிமை கொண்டவர். 1939 வரை அவர் ஜெர்மன் குடிமகனாக இருந்தார். 1905-ம் ஆண்டிலிருந்து கவுதமாலாவில் அவர் வங்கிப்பணி வர்த்தக நடவடிக்கை, தோட்டத்தொழில் ஆகியவற்றை கவனித்து வந்தார். ஆனால் ஜெர்மனியுடனான வர்த்தக உறவுகளை அவர் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வந்தார். ஜெர்மனிக்கு அவர் பலமுறை சென்று வந்துள்ளார்.
1931-ம் ஆண்டுக்குப் பிறகு லீச்சென்தடீனுக்கு அவர் சென்றார். அங்குதான் அவரது சகோதரர் வாழ்ந்து வந்தார்.1938-ம் ஆண்டு அவர் கவுதமாலாவை விட்டு வெளியேறினார். லீச்சென்ஸ்டீனை அடைந்த பிறகு தனது வழக்குரைஞர் வாயிலாக லீச்சென்ஸ்டீனின் இயல்பார்ந்த குடியுரிமை கோரி அவர் விண்ணப்பம் அனுப்பினார்.அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1939-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி இயல்பார்ந்த குடியுரிமை வழங்கப்பட்டது.
அதன்பிறகு அவர் லீச்சென்ஸ்டீனின் குடிமகனாகவே நடந்து கொண்டார். கவுதமாலா சம்பந்தப்பட்ட உறவை அவர் பொருட்படுத்தவில்லை. 1940-ம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் கவுதமாலாவிற்கு திரும்பினார். அவர் லீச்சென்ஸ்டீன் பாஸ்போர்ட்டு வைத்திருந்தார். கவுதமாலாவில் வெளிநாட்டவர் தொடர்பான பதிவேட்டில் அவர் லீச்சென்ஸ்டீன் குடியுரிமை பெற்றவர் என்று பதிவு செய்யப்பட்டது. போர் நடவடிக்கைகளையடுத்து 1943-ம் ஆண்டு அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. கவுதமாலா அரசால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு அனுப்பட்டார். அங்கு 2 ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-ம் ஆண்டு கவுதமாலாவில் அவருக்கு எதிராக 57 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவை யாவும் அவரது சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது சம்பந்தப்பட்டவையே. அமெரிக்க சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் கவுதமாலாவிற்கு திரும்பிச் செல்ல விரும்பினார். ஆனால் கவுதமாலாவிற்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு அவர் லீச்சென்ஸ்டீனுக்கு சென்றார். அதன்பிறகு அவர் அங்கேயே வாழ்ந்து வந்தார். 1949-ம் ஆண்டு, கவுதமாலாவில் உள்ள அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 ஆண்டுகள் லீச்சென்ஸ்டீனில் அவர் வசித்ததால் அவருக்கு ஆதரவாக லீச்சென்ஸ்டீன் அரசு வாதிட்டது. சர்வதேச நீதிமன்றத்தில் 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி லீச்சென்ஸ்டீன் அரசு வழக்கு தொடுத்தது. 1953-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பு, நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு குறித்து கவுதமாலா தெரிவித்த பூர்வாங்க எதிர்ப்பை நிராகரித்துவிட்டது. இரண்டாவது அம்சம், 10 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் இழப்பீடு குறித்த கோரிக்கையை விசாரணைக்கு அனுமதிப்பது தொடர்பானதாகும். கவுதமாலாவிற்கு எதிராக லீச்சென்ஸ்டீன் இந்த பிரச்சனையில் பாதுகாப்புகோருவது சரியில்லை என்பதற்கு ஆதரவாக 11, எதிர்ப்பாக 3 என்ற அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இவ்வாறு நோட்டிபாம் சார்பாக லீச்சென்ஸ்டீன் விடுத்த கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் இயல்பார்ந்த தேசியக் குடியுரிமையை நோட்டிபாமுக்கு லீச்சென்ஸ்டீன் வழங்கியது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. லீச்சென்ஸ்டீன் நோட்டிபாம் வாழ்ந்த காலம் தொடர்பான பிரச்சனையும் சர்வதேச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இயல்பார்ந்த தேசியக் குடியுரிமை வழங்கப்பட்டது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு ஏற்புடையதுதானா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் நீதிமன்றம் சில முடிவுகளை எடுத்தது.நோட்டிபாம், கவுதமாலாவில் தான் 34 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அங்குதான் வர்த்தகமும் நடத்தியுள்ளார். 1943-ம் ஆண்டு போர் நடவடிக்கைகளையடுத்து அவர் வெளியேற்றப்பட்டார். அதுவரை கவுதமாலாதான் அவரது வர்த்தக கேந்திரமாக இருந்துள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது லீச்சென்ஸ்டீனில் அவர் குறுகிய காலமே வாழ்ந்துள்ளார். அங்கு அவருக்கு நிரந்தர இருப்பிடம் இல்லை.
குறிப்பாக இயல்பார்ந்த குடியுரிமை கோரி விண்ணப்பித்த போது அவருக்கு அங்கு நிரந்தர வசிப்பிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல் தனது வர்த்தக நடவடிக்கைகளை கவுதமாலாவில் இருந்து லீச்சென்ஸ்டீனுக்கு மாற்றுகின்ற எண்ணமும் அவருக்கு இல்லை. எனவே லீச்சென்ஸ்டீனின் குடியுரிமை கொண்டவர் நோட்டிபாம் என்பதை ஏற்க முடியாது என சர்வதேச நீதிமன்றம் திட்டவட்டமாக் கூறிவிட்டது.
இதன் அடிப்படையில் நோட்டிபாம் சார்பில் லீச்சென்ஸ்டீன் வழக்கு தொடர முடியாது என்பதையும் உறுதிபட உரைத்தது.
ஏதேனும் சில காரணங்களால் சிலர் குடியுரிமையை இழக்கக் கூடும். சிலர் நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, இழந்த குடியுரிமையை மீண்டும் பெற முடியும்.
ஒரு நாடு போரில் தோல்வியடையக் கூடும் அல்லது மற்றொரு நாட்டால் கைப்பற்றப்படக் கூடும். இதில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தாலும் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் வெற்றியடைந்த நாட்டின் அல்லது தேசத்தை கைப்பற்றிய நாட்டின் குடிமக்களாகிவிடுவார்கள்.
ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு உடைமையாகக் கூடும். இணைப்பின் வாயிலாக இது நிகழக் கூடும். இவ்வாறு நேர்ந்தால் எந்த நாட்டோடு குறிப்பிட்ட தேசம் சேருகிறதோ அந்த நாட்டின் குடியுரிமையை சேருகின்ற நாட்டு மக்கள் பெறுவார்கள்.
இவை தவிர வேறுசில வழிகளும் உள்ளன. ஒரு நபர் வேறொரு நாட்டின் பிரதான சேவையில் ஈடுபடுத்தப்பட்டால், அவர் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதும் சாத்தியமே.CAA  ஆங்கில விரிவாக்கம் 
Citizenship Amendment Act  குடியுரிமை திருத்தச் சட்டம்.
CAA பல முறை திருத்தப்பட்டிருக்கிறது.இச் சட்டம் முதலாவதாக, ராஜிவ் காந்தி  பிரதமராக இருந்த காலத்தில், 1985 ல் திருத்தப்பட்டது. 1992ல் இரண்டாம் முறையாகவும், 2003ல் மூன்றாம் முறையாகவும், 2005ல் நான்காம் முறையாகவும், 2015ல் ஐந்தாம் முறையாகவும் திருத்தப்பட்டுள்ளது. இப்போது மோடி தலைமையிலான பா.ஜ.க, அரசால் திருத்தப்பட்டது, ஆறாவது முறை 
ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள். பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில், 6 மதத்தினர்தான் சிறுபான்மை 



  • கடந்த, 2014, டிச., 31 வரை 
    இந்தியாவில் வசிக்கும் நாடற்ற அகதிகளின் அசைலம் எண்ணிக்கை, 2,89,394 ஆகும். இது பாராளுமன்றத்தில் அரசு தெரிவித்த தகவல். இவர்களில் வங்கதேசத்தவர் மட்டும், 1,03,817 பேர். இலங்கை தமிழர்கள் 1,02,467 பேர். திபெத்தியர்கள் 58,165 பேர். பர்மா நாட்டவர், 12,434. இது, பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை. பதிவு செய்யப்படாமல், சட்ட விரோதமாக இருப்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருக்கும் என்பது, பாதுகாப்பு ஏஜன்சியினரின் கணிப்பு. பர்மாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரோகின்ஹியா இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மட்டும், 40,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
    1947ல், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாகவும், இந்தியா மதசார்பற்ற நாடாகவும் அறிவிக்கப்பட்டது
    இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்ட போது அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என, மகாத்மா காந்தி கூறியிருந்தார்
     வெளிநாட்டினர் இந்தியாவில், அதிகாரப்பூர்வ அனுமதியுடன், 11 ஆண்டுகள் தங்கியிருப்பின், இந்திய குடியுரிமை வழங்கலாம் என்ற அடிப்படையில், காங்., தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோருக்கு, வழங்கப்பட்டது ?(வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன், அங்கு மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, புத்தகம் எழுதினார். பயங்கரவாதிகளின் கொலை மிரட்டலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்து, குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். இவருக்கு, மத்திய அரசு, இந்திய குடியுரிமை வழங்கியது. தஸ்லிமா நஸ் ரீன், ஓர் இஸ்லாமியர் என்பதால், குடியுரிமை மறுக்கப்படவில்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில், சிறுபான்மையினர் என்பதால் துன்புறுத்தலுக்குள்ளாகி, சட்டப்படியாக இந்தியாவிற்குள் தஞ்சம் புகுவோருக்கு, குடியுரிமை வழங்கிட வழிவகை செய்கிறது. மேற்கண்ட மூன்று நாடுகளிலும் வசிக்கும் இஸ்லாமியர்கள், 'சிறுபான்மையினர் அல்ல' என்பதையும் கவனிக்க வேண்டும்.அதற்கும் இங்குள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டம் புரிந்து கொள்ளாமல் நடக்கிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...