சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் என அரசின் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பாளர்கள் நடத்தயிருந்த சென்னை சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராடியவர்கள் தாக்கப்பட்டதால் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை தாம்பரம் வாராகி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
என்.ஆர்.சி., என்.பி.ஆர். உள்ளிட்ட நடைமுறைகளுக்கும், சி.ஏ.ஏ. சட்டங்களுக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த முற்றுகைப் போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவை காவல்துறை நிராகரித்துள்ளது. மேலும், வண்ணாரப்பேட்டை சி.ஏ.ஏ. போராட்டம் தொடர்பாக இதுவரை 12 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமைதியாகப் போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்பேரவையை முற்றுகை என்பது சட்டவிரோதம் அதற்கு காவல்துறை அனுமதிக்காது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றூம் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை ஏற்று, தமிழக உள்துறை, காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் மார்ச் 11 ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்