கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில் கிராமமக்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கீழடியில் நாளை மதியம் 3 மணிக்கு விடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி 6ம் கட்ட அகழாய்வை தொடங்கி வைக்கிறார். கீழடியில் ஏற்கனவே மத்திய அரசு 3 கட்ட அகழாய்வும், மாநில அரசு 2 கட்ட அகழாய்வையும் நடத்தி முடித்துள்ளனர். இதில் வட்டபானை, சுடுமண் குழாய், இரட்டை சுவர், உறைகிணறு, செங்கல் கட்டுமானம், கால்வாய் அமைப்பு, முத்து, பவளம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள் என ஆய்வில் தெரிய வந்ததையடுத்து கீழடியில் நடந்த 5ம் கட்ட அகழாய்வை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இதனையடுத்து 6ம் கட்ட அகழாய்விற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் நாளை மதியம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் அகழாய்வுப் பணி தொடங்க உள்ளது. அகழாய்வு நடைபெறும் கிராமங்களுக்கு தனித்தனி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடந்த நீதியம்மாள் என்பவர் நிலத்தில் 6ம் கட்ட அகழாய்வு நாளை தொடங்க உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க கிராமம் அகரம், மதுரை மாநகருக்கு வெகு அருகில் அகரம் உள்ளது. இங்கு அகழாய்வு செய்வதன் மூலம் பண்டைய கால பொருட்கள் அதிகளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நில உரிமையாளர் கதிரேசன் கூறுகையில் 6ம் கட்ட அகழாய்வு என் நிலம், நீதியம்மாள், மாரியம்மாள் உள்ளிட்டோர் நிலத்தில் நடைபெற உள்ளது இதன் மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறை குறித்த கூடுதல் ஆதாரம் கிடைக்க வாய்ப்புள்ளது ஏற்கனவே எங்கள் நிலத்தில் நடந்த அகழாய்வில் சுடுமண் குழாய், பவளம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன. தற்போதைய அகழாய்வில் மேலும் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் .
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்