அவசரத் தேவைக்கு வாங்கி பயன்படுத்தப்படும் இட்லி - தோசை மாவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதால், பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது மட்டுமின்றி, தென்னிந்தியாவின் பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை மாறியுள்ளது. சிறிய மளிகைக்கடை முதல் பெரிய அளவிலான மொத்த விற்பனை நிலையங்கள் வரை மாவு விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. முறையான அங்கீகாரம் பெற்று விற்பனை செய்யப்படும் மாவு பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட விபரங்கள் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கீகாரம் பெறாத தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவுப் பொருட்களில் இந்த விபரங்கள் இருப்பதில்லை. மாவு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அரிசி, உளுந்து, கிரைண்டர், தண்ணீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் கையாளப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது. ஆனால், அங்கீகாரம் பெறாத மாவு தயாரிப்பு நிறுவனங்களில் இத்தகைய நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பது சந்தேகமே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், பென்சாயில் கலக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.தமிழர்களின் உணவுகளில் ஒன்றான இட்லிக்கான மாவை வெளியில் வாங்குவது ஆபத்தான உயிர்கொல்லி விஷமாக மாறியுள்ளதா. கடந்த பல ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்து போய் மாவு விற்கப்படுகிறது ஒரு புறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை மாறி
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது பலருக்கும் தெரிவதில்லை
6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கும் வியாபாரம் . ஒரு நாளைக்கு 3 லிருந்து 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12 லிருந்து 18 மணி நேரம் தொடர்ந்து ஓடுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. மேலும் இவர்கள் சேர்க்கும் சோடா உப்பு, அஜின மோட்டோ போன்ற வேதிப்பொருள் சிறு நீரகத்தில் கல் ஏற்படும் நிலை
நல்ல அரிசி, உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடித் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டி பயாடிக்).இது…
உடம்பு உஷ்னம்
வாய் துர்நாற்றம்
குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.
மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே தாம் சென்னை மாநகராட்சிக் கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.எனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது சிறந்ததுசுகாதாரமற்ற நிலையில் தயாரிக்கப்பட்டு பாலித்தீன் கவர்களில் விற்கப்படும் இட்லி, தோசை மாவில் கலப்படம் உள்ளதால், ஆவி பறக்க இட்லி சாப்பிடும் அப்பாவிகள் ஆவியாகும் அபாயம் உள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. நீங்கள் வாங்கும் பொருள்களில் கலப்படம் இருக்கிறது என உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் தகுந்த ஆதாரங்களுடனோடு கட்செவியஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். உடனே அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் நேரில் புகார் அளிக்கலாம்.
தொடர்பு எண் 9444042322 ஆகும்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்