நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த 10 மாணவர்கள் புகைப்படம் வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. தேடுதல்
நீட் தேர்வில் முறைகேடு வழக்கில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ,மாணவிகளின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ளனர்.
‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேனி மருத்துவக்கல்லூரி மூலம் இந்த முறைகேடு பார்வைக்கு வந்தது. தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. காவல்துறை முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என மொத்தம் 14 பேரைக் கைது செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆள் மாறாட்டம் மூலம் முறைகேடு நடந்திருப்பது தெரிய சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் சார்பாக நேற்றிரவு ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 2 மாணவிகள், 8 மாணவர்கள் புகைப்படங்களை வெளியிட்டதுடன், பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை என்றும், அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. சென்னை அலுவலகத்துக்கு 9443884395 என்ற தொலைபேசி எண்ணிற்குத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்