மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வென்ற மதர் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிவகங்கை மாவட்ட பிரிவு சார்பில் 2019-2020ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்களுக்கான பந்து எரிதல் போட்டியில் S. பாலசந்திரன் முதல் பரிசு பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து பெண்களுக்கான 50 மீட்டர் ஓட்டம்பந்தயத்தில் M.சுபிக்க்ஷா லாவன்யா முதலிடம் பிடித்துள்ளார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பரிசு வழங்கிப் பாராட்டும் தெரிவித்தார் நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், மதர் சிறப்புப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருண்குமார் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்