முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூங்கியவர்களை எழுப்பி கொள்ளையடித்த திருடர்கள் நாகையில் பரபரப்பு

       சு.மணிகண்டன் மாவட்டச் செய்தியாளார்       ,நாகப்பட்டினம்  திரைப்படக் காட்சி போல வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச்சு.மணிகண்டன் மாவட்டச் செய்தியாளார்,நாகப்பட்டினம்.
           திரைப்படக் காட்சி போல வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மத் திருடர்களுக்கு காவல்துறை  வலைவீச்சு 
நாகை மாவட்டம் பொரவச்சேரியைச்  சேர்ந்த பன்னீர் அவரது மனைவி பொண்ணேஸ்வரி , பண்ணீர் தங்கை ராணி ஆகியோர் வழக்கம்போல நேற்றிரவு வீட்டில் உறங்கத்தில் இருக்க நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம திருட்டுக் கும்பல்  உறங்கிய மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை சுதாரித்த கொள்ளைக் கும்பல் அவர்களிடம் இருந்த தாலிச் செயின், மோதிரம் உள்ளிட்ட 16 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். கொள்ளைக் கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்த பொண்ணெஸ்வரி மற்றும் ராணி ஆகியோர் நாகபட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இத் தகவல் அறிந்த கீழ்வேளூர் காவல்துறையினர் நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். நாகை அருகே திரைப்பட பாணியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை நள்ளிரவில் புகுந்து தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்ற மர்மத் திருடர்களுக்கு காவல்துறை  வலைவீச்சு 

நாகை மாவட்டம் பொரவச்சேரியைச்  சேர்ந்த பன்னீர் அவரது மனைவி பொண்ணேஸ்வரி , பண்ணீர் தங்கை ராணி ஆகியோர் வழக்கம்போல நேற்றிரவு வீட்டில் உறங்கத்தில் இருக்க நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம திருட்டுக் கும்பல்  உறங்கிய மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை சுதாரித்த கொள்ளைக் கும்பல் அவர்களிடம் இருந்த தாலிச் செயின், மோதிரம் உள்ளிட்ட 16 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். கொள்ளைக் கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்த பொண்ணெஸ்வரி மற்றும் ராணி ஆகியோர் நாகபட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இத் தகவல் அறிந்த கீழ்வேளூர் காவல்துறையினர் நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். நாகை அருகே திரைப்பட பாணியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை நள்ளிரவில் புகுந்து தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள்