தென் கடலோர மாவட்டங்களில் நேற்றுமுதல் சாரல்மழை
டெல்டா கடற்கரையிலிருந்து தென் தமிழக கடற்கரை வரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்த நிலையில்
திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, ஆகிய கடலோரப்பகுதியில் மழை பெய்தது இராமேஸ்வரம், பாம்பன், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது
இந்நிலையில் நேற்று இரவு முதல்
நாகர்கோவில், பார்வதிபுரம், சுங்கான்கடை, புத்தேரி உள்ளிட்ட இடங்களிலும், நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர், நாங்குனேரி, மூன்றடைப்பு உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் இன்று கலந்து கொள்கிறார்.தூத்துக்குடியில் மழை பெய்ததால் சென்னையில் இருந்து தாமதமாக விமானத்தில் முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையும் வட மாவட்டங்களைவிட தென் மாவட்டங்களிலேயே நல்ல மழைப் பொழிவைத் தந்தது. குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் அதிக மழைப் பொழிவு கிடைத்தது. இந்நிலையில் தற்போதும் அந்தப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்