தமிழகத்தின் சார்பில் மாநிலங்களவைப் பதவிக்குப் போட்டியிட்ட ஆறு பேரும் போட்டியின்றித் தேர்வு என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு. தி மு க வின் சார்பில் போட்டியிட்ட திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் மற்றும் அ இ அ தி மு க சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகிய ஆறு பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதேபோல் மகாராஷ்டிரா ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி ராஜீவ் சதவ் (ஐ.என்.சி) பிரியங்கா சதுர்வேதி (எஸ்.எஸ்.) ராம்தாஸ் அதாவலே (ஆர்.பி.ஐ-அதாவலே) ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்