முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளாவில் கோவிட் 19 தடுப்புக்கு இளைஞர் படை முதல்வர் பினராய் விஜயன்

கேரளாவில் கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ இளைஞர் படை ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் இலவச உணவு தானியம்: கேரளா முதல்வர் பினராய் விஜயன் பேட்டி திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் வியாழனன்று நிருபர்களிடம் கூறியது
கோவிட் 19 நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 22 மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அடங்கிய ஒரு தன்னார்வ தொண்டர் படையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த கட்டத்தில் 2,36,000 பேர் அடங்கிய தொண்டர் படை களத்தில் இறக்கப்படுவார்கள்.
 கேரளாவிலுள்ள 941 பஞ்சாயத்துகளில் தலா 200 பேர் வீதமும், 87 நகரசபைகளிக் தலா 500 பேர் வீதமும் இருப்பார்கள்.
 இந்த தொண்டர்படையில் சேர சன்னதம் என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
 இதற்காக இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் முன்வர வேண்டும்.இவர்கள் பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். உணவு மற்றும் உணவுப்   பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவியாக தங்கியிருக்க வேண்டும்.
 இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் இவர்களுக்கான பயணச் செலவை உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும்.
 இவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.  மருத்துவமனைகளில் நோயாளியுடன் இருப்பதற்காக இளைஞர் ஆணையம் ஒருநாளில் 1465 பேர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி உள்ளது ரேஷன் கார்டு இல்லாமல் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவர்களது ஆதார் எண்ணை பரிசோதித்த பிறகு உணவு வழங்கப்படும்.
 கூட்டுறவு அமைப்புகள் மூலம் நல்ல ஓய்வு ஊதியம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது 
தற்போது உள்ள சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்களை விலையை கூட்டி விற்க அனுமதிக்க முடியாது. 
இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த வியாபாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
 மொத்த வியாபாரிகளிடமிருந்து பொருட்களை சில்லறை வியாபாரிகளுக்கு கொண்டு செல்ல எந்த இடையூறும் இருக்காது. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 மற்ற மாநிலங்களில் இருந்து உணவு பொருட்களை கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெளிமாநிலங்களில் இருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு தேவைப்பட்டால் இங்கிருந்து கான்வாய் அடிப்படையில் வாகனங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் உதவியும் கோரப்படும்.
கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளிகளை அவர்கள் தங்கும் இடங்களில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இதை அனுமதிக்க முடியாது. அவர்களை தங்கும் இடங்களில் இருந்து இறக்கி விடுவதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதி, சிகிச்சை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தவேண்டும்
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்ள பிரதமரின் அறிவுரையின்படி மத்திய அமைச்சர் சதானந்த கவுடா டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.கேரளாவின் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அவர் முழு திருப்தி தெரிவித்துள்ளார்
 இது மகிழ்ச்சி தரும் விஷயமாகும். கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தினமும் மத்திய அரசுக்கு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மத்திய நிதியமைச்சர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது.
 தொழில் உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளா ஏற்கனவே கோரிக்கை விடுத் திருந்தது.ஏற்கனவே மேற்கொண்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் நிதியும் பயன்படுத்தப் படும். நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது மற்ற வசதிகளையும் அரசு ஆலோசித்துள்ளது.கேரளாவில் உள்ள 879 தனியார் மருத்துவ மனைகளில் உள்ள 69,434 படுக்கைகளும், 5607 அவசர சிகிச்சைப் பிரிவுகளும், 716 விடுதிகளில் உள்ள 15,333 அறைகளையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
தற்போது லாக் டவுன் அமலில் இருப்பதால் உணவு கிடைக்காதவர்களுக்காக சமூக சமையலறை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்த பட்டுள்ளன. 43 உள்ளாட்சி அமைப்புகளில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
96 பஞ்சாயத்துகளில் 861 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 87 நகர சபைகளில் 84 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதன. 6 மாநகராட்சிகளில் ஒன்பது இடங்களிலும் சமூக சமையல் அறை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்களை பயன்படுத்தி உணவு விநியோகிக்கும் பணி தொடங்கப்படும்.பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை குறைக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்க வெளியில் செல்ல உரிமை உண்டு.இவ்வாறு செல்பவர்கள் தங்களுடன் ஒரு உறுதிமொழி பாத்திரத்தை வைத்திருக்க வேண்டும்.பிறந்த குழந்தை களுக்கு பயன்படுத்த ப்படும் உடைகளை மருந்து கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 2012 க்கு பின்னர் ஓய்வு பெற்ற 1640 டாக்டர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.இவர்களுடைய அனுபவத்தையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அனைத்து  மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற டாக்டர்களின் பட்டியல் தயாரிக் கப்படும்.நர்சிங் மாணவர்களின் விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன .இவர்களது சேவையும் பயன்படுத்தப்படும். சுகாதாரத் துறையினர் பயணம் செய்வதற்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் பயன்படுத்தப்படும்.
பி.எஸ் 4 வாகன பதிவு  தேதியை மார்ச் 31ல் இருந்து நீட்டிக்க மத்திய அரசிடம் கோர தீர்மானிக்கப் பட்டுள்ளது. வங்கிகளில் விவசாய தேவைக்கான 4 சதவீத வட்டியில் வாங்கப்படும் கடனுக்கான தொகையை கட்டுவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31லிருந்து ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டு்ள்ளது. இவ்வாறு கேரளா முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . கேரளாவில் மொத்தம் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...