2021ல் நான் தான் சிஎம். நடிகர் வடிவேலு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்கள், அவரிடம் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்துக் கேட்க அதற்கு ''நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது ஏன் உங்களுக்கும் தெரியாது'' என்றார். கட்சிக்கு ஒருவரும், ஆட்சிக்கு ஒருவரும் என்ற ரஜினியின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, அது வரவேற்கத்தக்கது என்றும் ரஜினி முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்பது நல்ல விஷயம் மக்களுக்கு நல்லதை யார் செய்தாலும் வரவேற்கலாம்'' என தெரிவித்தார். 2021ல் நான் தான் சி.எம். அதை ரொம்ப பேர் கெடுக்கப் பார்க்குறாங்க. வாங்க மோதிக்குவோம் என்று நகைச்சுவையாகப் பேசி நகர்ந்தார். மீண்டும் திரையுலகம் வருவதற்கு முருகனே வழி பண்ணுவார். யார் கெடுத்தாலும் அவர் பார்த்துக் கொள்வார் என்றார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்