இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஏப்ரல் 25 ல் தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தை மார்ச் 1 அன்று நள்ளிரவில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலைக்கக் கூடும் என எதிர்பார்க்கப் பட்ட நிகழ்வு நடந்ததது . மத குருவிடம் ஆலோசனை நடத்தினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜபக்சேவை, கோத்தபய நியமித்தார். இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைக்க, மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவோ அல்லது நான்கரை ஆண்டுகள் முடிந்தால் தான் கலைக்க முடியும்.
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க, எதிர்க்கட்சிகளின் ஆதரவில்லை. நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால், நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நேற்று மதியம், இலங்கையின் கண்டி நகரில் உள்ள, புகழ் பெற்ற பௌத்த ஆலயமான, தலதா மாளிகைக்கு கோத்தபய ராஜபக்சே சென்றார். அங்கு சிறப்பு பூஜைகளில் பங்கேற்றவர், மத குரு வரக்காகொட ஸ்ரீஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்த பின் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டது .
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்கான, ஐ.நா., தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசு தற்போது விலகியிருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மீண்டும் தேர்தல் நடந்தால், இலங்கையில் அரசியல் மாற்றம் வரும் என, எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்