திருப்பத்தூர் இந்திராகாந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியின் பனிரெண்டாமாண்டு விழா பிப்ரவரி இருபத்தொன்பதாம் தேதி சிறப்பாக நடந்தது பள்ளியின் நிறுவனத் தாளாளர் கல்வியாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் பெ. கணேசன் தலைமையில் ஏற்பாடு செய்த விழாவில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்வியியல் கல்லூரி செயலாளர் நா. ராமேஸ்வரன் முன்னிலையில், ஆசிரியர் சேதுக்கரசி வரவேற்புரையாற்றினார். திருப்பத்தூர் நகர் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தி மாவட்ட அரிமாசங்கத்தின் அங்கத்தினரான ஜோதி பழனிவேலு இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி மேலாளர் க.பிரியங்கா குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைக்க திருப்பத்தூர் உட்கோட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் பாரத்தைச் சான்றிதழும் வழங்க , மாவட்டக் கல்வி அலுவலர் பங்கஜம் உள்ளிட பலர் சிறப்புரையாற்றினார்கள். புதுக்கோட்டையில் முன்னாள் வட்டாட்சியராக பணியிலிருநது ஓய்வு பெற்ற பூலாங்குறிச்சி நாகராஜன், கருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் நாச்சியப்பன் என்கிற குமார், பிரைமரி நர்சரி பள்ளிகளின் சங்க ஒருங்கிணைப்பாளரும் பிஸ்மி பள்ளி நிருவனருமான பீர் முகமது, பூலாங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான பூவாலை, இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஏகாம்பாள் கணேசன் பள்ளியின் முதல்வர் செந்தில் குமார் புதுக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் மாரிமுத்து, ரவிச்சந்திரன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கத் துணை முதல்வர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார். பள்ளி மாணவ மாணவிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இனிதாக நடந்தது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்