பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம், மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என்று ’பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான மனித உரிமைகளின் ஐ.நா. சிறப்பு செய்தித் தொடர்பாளர் லியோ ஹெல்லர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 5.3 கோடி கழிப்பறைகள் கிராமப்புறங்களில் கட்டப்பட்டிருப்பதாக தூய்மை இந்தியா இணையதளத்தில் கூறப்பட்டிருந்தாலும் கிராமப்புறம் மற்றும் நகர்புறப்பகுதிகளில் இன்னமும் கையால் மல மள்ளும் அவலம் நீடிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதனால் தான் தூய்மை இந்தியா திட்டம் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
மோடி அரசினால் திறந்த வெளி கழிப்பிடமில்லா இடம் என்று சான்று அளிக்கப்பட்ட பல இடங்கள் அவ்வாறு இல்லாமல் இருப்பதை தான் கண்கூடாக பார்த்ததாக ஹெல்லர் கூறியிருக்கிறார்.
இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பெரும் பகுதி பிரதமர் மோடி அவர்களை விளம்பரப்படுத்துவதற்காகவே செலவழிக்கப்பட்டுள்ளது என்று ஹெல்லர் செய்தி ஊடகங்களிடம் கூறினார். இது உண்மையா இல்லையா என்பது இத் திட்டம் நடைமுறையில் பார்க்கும் மக்கள் தான் கருத்துக்களைக் கூற வேண்டும் பார்வையாளர்கள் கூறுவதை விட அனுபவிப்பவர்கள் கூறுவது தான் சரியாகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்