முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடைக்கால உத்தரவுகளை ஏப் 30 வரை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உள்பட, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரானா வைரஸினால், இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கடந்த 23 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதனால், அத்தியாவசியப் பணிகளைத் தவிர நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீதிமன்றங்கள் அனைத்தும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை  மூடப்பட்டுள்ளன.
அவசியம் என்று கருதப்படும் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நீதிமன்றங்கள் எதுவும் செயல்படாததால், நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் அனைத்தும்  ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய  டிவிசன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது  உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியவை பல வழக்குகளை விசாரித்து இடைக்காலத்தடை உத்தரவுகளை பிறப்பித்து இருக்கும். அந்த இடைக்காலத்தடை உத்தரவுகள் எல்லாம் மார்ச் 20 ஆம் தேதி, அல்லது அதன் பின்னர் காலாவதியாகக்கூடும். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. 
இதனால், நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் செயல்படவில்லை. வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களால் நீதிமன்றங்களில் ஆஜராக முடியாது. நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே, வீடுகளைக் காலி செய்வது உள்ளிட்டவைகளுக்காக ஏற்கனவே பெறப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுகளை எல்லாம் நீட்டிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்றங்களிடம் பெறப்பட்ட இதுபோன்ற இடைக்கால நிவாரண உத்தரவுகளின் பலன்களை பொதுமக்கள் அனுபவிப்பதற்கு இடையூறு எதுவும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம்.
நீட்டிப்பும், நிறுத்திவைப்பும்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால், நீதிபரிபாலன நடைமுறையில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 226, 227 ஆகியவற்றுடன் இணைந்த குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவுகள் 482, 483 ஆகியவற்றை பயன்படுத்தி, சிறப்பு உத்தரவுகளை பிறப்பிக்கிறோம். உயர்நீதிமன்றம்,  ஏற்கனவே பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம். 
சொத்தில் இருந்து ஒருவரை வெளியேற்றவும், அப்புறப்படுத்தவும், ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை இடிக்கவும் உயர்நீதிமன்றம், மாவட்ட செசன்சு நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்கள், ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவுகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 
ஜாமீன், முன்ஜாமீன், பரோலுக்கும் இது பொருந்தும்!
அதுபோல, குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்தனைகளுடன் பெறப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன், பரோல் ஆகியவை, மார்ச் 20 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்திருந்தால், அவற்றை எல்லாம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்.
இந்த உத்தரவுகள் அனைத்தும், இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்து இருந்தால், அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும். இவ்வாறு இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதால், அரசுக்கோ, தனி நபருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நிவாரணம் கேட்டு அணுகலாம் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...