ஹோலி விழா வட இந்திய இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை பங்குனி மாதம் ஆங்கிலத்தில் மார்ச்மாதம் வரும் பௌர்ணமியில் கொண்டாடப்படும் விழா,
கிருஷ்ணர் கோபியர்களுடன் விளையாடியதுதான் ஹோலி ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு.
ஹிரண்யன் தன்னை எல்லோரும் கடவுள் எனத் தொழ வேண்டும் என்று எண்ணினான். மகன் பிரகலாதன், அதை எதிர்த்து மகாவிஷ்ணுவே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த ஹிரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான்.
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு ஹிரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என ஹிரண்யன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பில் மீண்டார். ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள்
இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினம் ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.இதை தமிழகத்தில் ஒரு வடமாநிலங்களில் வாழும் கலாச்சாரம் கொண்டவர்கள் மட்டுமே கொண்டாடுவது வழக்கம் சென்னை நகர் தற்போது சௌகார்பேட்டை துவங்கி புரசைவாக்கம் வரை மார்வாடிகளின் ஆதிக்கம் வந்துவிட்டது அதேபோல் மதுரை மீனாட்சியம்மன் ஆலயப் பகுதிகளில் தற்போது ஆதிக்கம் துவங்கி தமிழர்களின் பண்பாடு மறைந்து இந்த விழாக்கள் கலைகட்டிவருகிறது அதில் தான் கலாச்சாரக் கலப்பும் நம் தாய்மொழி பண்பாட்டு இழப்புகள் நடப்பதை பார்க்க முடிகிறது இந்தப் பண்டிகை நம் பகுதியில் மக்கள் யாரும் கொண்டாடுவது பார்த்ததே இல்லை.ஆக ஹோலி என்பது வடமாநிலத்தவர்களின் திருநாளாகவே தமிழகத்தில் பார்க்கப் படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்