கொரானா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ.மும்பை அரசு மருத்துவமனையில் தன்னை நர்ஸாக இணைத்துக்கொண்ட பாலிவுட் கதாநாயகி
இந்தியில் காஞ்சலி லைஃப் இன் எ ஸ்லாஹ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷிகா மல்கோத்ராவுடன்
சஞ்சய் மிஸ்ரா கதாநாயகனாக நடித்திருந்தார். தெடிப்பியா ஜோஷி இயக்கிய படம் பிப்ரவரியில் வெளியானது.
நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு மருத்துவச் சேவையில், தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்று அரசு சமீத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து, நடிகை ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் தன்னார்வ நர்ஸாக 28 மார்சில் இணைந்துள்ளார். இவர், நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்தவர்.
நடிகையாகி விட்டதால், நர்ஸாகப் பணியாற்றாமல் இருந்தார். இப்போது தன்னைப் பணியில் இணைத்துக் கொண்டு உள்ளார். "நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நடிகையாகவும், நர்ஸாகவும் சேவையாற்றத் தயாராக இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். அரசுக்கு உதவுங்கள்" என்று இவர் தெரிவித்துள்ளார். இவரது அம்மாவும் நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செயல் பலருக்கும் விழிப்பாக அமையும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்