இந்தியாவில் கொரானா வைரஸால் 28 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்
கொரானோ வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று கூறியிருந்த நிலை, தற்போது 28 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் குணமடைந்த பின்னர் வெளியேற்றப்பட்ட மூன்று கேரள நோயாளிகளும் இவர்களில் அடங்குவர். மீதமுள்ளவர்கள் இந்த வாரம் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இருந்து டெல்லி திரும்பிய 45 வயதுடையவர், துபாயில் இருந்து பெங்களூரு திரும்பிய ஹைதரபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர், ஆக்ராவைச் சேர்ந்த 6 பேர், ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 16 சுற்றுலாபயணிகள் மற்றும் இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு கார் ஓட்டிய டிரைவர் ஆகியோர் கொரானோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும். மனிதர்களுக்குள் கொரோனா வைரஸ் பரவும் என்பதை சீனா சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. சளித்தொல்லை போல் இருமல், தொண்டை செருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளையும் ஆஸ்துமா அறிகுறிகளையும் கொண்டிருப்பதாகவும், முதியோர்- சிறுவயதினர் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தோரை எளிதில் தொற்றி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுப்பதே தற்போது முதன்மை நோக்கமாக இருக்கிறது. எச்.ஐ.வி.க்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து, அதன் மூலம் மருந்து கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனாவில் உருவான ‘கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கி உள்ளது. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 17 பேர் ‘கொரோனா’வில் பலியாகி உள்ளனர். 299 பேர் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா,6914 கொரோனொ நோயாளிகள் சிகிச்சையில்லாமல் தென்கொரியாவில் தவிப்பு ஒரு நோயாளிக்கு சென்னையில் சிகிச்சையாம் ஒருமாத்த்தில் தென்கொரியா நிலைதான் தமிழகத்திலும் இது சுகாதாரத் துறைக்கும் அதன் அமைச்சர் விஜய பாஸ்கருக்கும் விடப்படும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்