பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குரு, துரோணாச்சாரியாருக்கும் கிரிபிக்கும் மகன் தான் அஸ்வத்தாமா,பிறப்பிலேயே நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டிருந்த
தால் சக்திக்கெல்லாம் இந்த கல்லே காரணமாகும். வில்வித்தையும், போர்க்கலையும் கற்று மிகச்சிறந்த போர் வீரரானாகவே வளர்ந்தார்.
மகாபாரதப் போரில் கௌரவர்களின் பக்கமிருந்து, அவருடைய தந்தையுடன் சேர்ந்து அஸ்வத்தாமா சண்டையிட்டார். தன் மகனை உயிராக நினைத்தார் துரோணாச்சாரியார். அதனால் போரின் போது அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியைக் கேள்விப்பட்ட துரோணாச்சாரியார், தன் கைகளைத் துறந்து தியானத்தில் ஈடுபட்டார். அப்போது திரிஷ்டட்யூம்னரால் கொல்லப்பட்டார்.அனைத்துக்கும் தீர்வுண்டு மகாபாரதத்தில்.
பாரதப் போரில் அஸ்வத்தாமா தந்தை துரோணாச்சாரியார் கொல்லப்பட்டபோது அதிகக் கோபமடைந்து மிகப் பயங்கரமான ஆயுதம் "நாராயண அஸ்திரத்தை' அல்லது பிரம்மாஸ்திரத்தை பாண்டவர்களின் சேனை மீது தொடுத்தார். யாராலும் பதிலடி கொடுக்க முடியவில்லை. இந்த ஆயுதம் மக்களை கொல்வதற்கும், கையில் ஆயுதங்களை வைத்திருப் பவர்களை உடனே அழிப்பதற்கும், எதிரில் போர்புரிபவர்களை அழிக்கவும் முடியும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர் சேனைக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். 'தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு அமைதியாக சில காலம் கைகளை மடித்து வைத்திருக்கக் கட்டளையிட்டார். அந்தப் போரின் கருத்தைக்கூட உங்கள் மனதில் கொண்டு வர வேண்டாம், அது அவர்களையும் அழிக்கிறது.
அஸ்திரத்தின் நேரம் காலாவதியாகும்போது, நாராயண அஸ்த்திரம் மொத்தமாக அமைதி யாகிரது.இந்த வழியில், பாண்டவ சேனை பாதுகாக்கப்பட்டது. கொரானா அந்த அஸ்திரம் போல வேலை செய்வதால் இந்த அத்தியாயத்தை நியாயப்படுத்த இந்தக் கருத்து பதிவிடவில்லை ஒரு உதாரணமாக எல்லா இடங்களிலும் போர்கள் வெற்றி பெறாது. இயற்கையின் கோபத்தைத் தவிர்ப்பதற்கு, நாம் எல்லா வேலைகளையும் சிறிது நேரம் விட்டுவிட்டு, அமைதியாக கைகளை மடித்து, நல்ல மனதை மனதில் வைத்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதன் அழிவைத் தடுத்து பழைய நிலையைத் தக்கவைக்க முடியும். தனிமையில் இருக்கலாம் என்பதே இதன் கருத்து. கொரானா அதன் காலத்தை (14 நாட்கள்) முடிப்பதன் மூலம் குளிர்ச்சியடையும்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தீர்வு கூறியபடி. இப்போது பலர் அரசின் உத்தரவை ஏற்பவர்கள் எல்லாம் வாதம் செய்யாமல் இருக்க ஒருசிலபேர் விதிகள் மீறுவது அத்தியாவசி யமான செயலாக பார்க்கக் காரணம் சில இயக்கம் இப்பொழுதும் நடக்கிறது அது மருத்துவம்,பால்,காய்கறிகள், என அதற்கு ஜனங்கள் வருவது இயல்பு தேவை இல்லாதவன் தெருவில் வரமாட்டான் அரசு அவன் அத்யாவசியமான தேவைகள் நிறைவேற்றும் முன்பாகவே அறிவித்த ஊரடங்கு என்பதால் இந்த நிலை. எல்லாம் மாறும் அல்லது அப்படியே பழகி விடும் சீனா ஏவிய கொரானா எனும் கொடிய கொள்ளை நோய் அஸ்திரம் அமைதியாகும் வரை நாமும் அமைதியாவோம். ஒரு கடைக் காரர் தனது கடையில் "ஏய் கொரோனா, நாங்கள் அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவு காரணமாகத்தான் கடையை மூடியுள்ளோமே தவிர உனக்கு பயந்து என்று தவறாக எண்ணிவிடாதே" என்று கொரோனாவை ஒருபக்கம் எச்சரிக்கிறார். மற்றொரு கடையுள்ள இடத்தில் மனிதர்கள் போல இடைவெளி விட்டு வரிசையில் நிற்பதற்கு நாய்களுக்கும் பயிற்சியளித்துள்ள நிலை, காரணம் மரணத்தின் மீது மக்களின் பயம். அதற்கான மந்திரத்தை நடிகர் ஏஸ். வி. சேகர் வெளியிட்டே விட்டார்.நடிகர் வடிவேலு நடித்த ஒரு படத்தின் வசனம் போல 'ஒருநாள் சும்மாயிருந்து பார் அப்போது புரியும் சும்மா இருப்பது அவ்வளவு சுலபமில்லை' என.அதனால் சும்மா இருப்பதால் தங்களுக்கு பொழுதுபோக்காக தொலைபேசியில் வரும் கருத்து, விமர்சனம் செய்யும் எந்த செய்திகளையும் பகிர வேண்டாம் இது தற்போது அவசியமற்றது. அரசிற்கு முழுமையாக ஒத்துழைப்போம் தவறான தகவல்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் Forward செய்யாதீர்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்