புதுக்கோட்டை சமஸ்தானம் குறித்த தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்"என புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின்
முன்னாள் காப்பாட்சியர் டாக்டர் ஜெ.ராஜா முகமது வேண்டுகோள்
கடந்த 3ஆம்தேதி வாட்ஸ்அப்பில் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த தினம் என தவறான பதிவுகளைச் சிலர் பரப்பி உள்ளனர். "புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைந்த தினம் 03.03.1948. இந்தியாவில் இருந்த 565 சமஸ்தானங்களுள் இதுவும் ஒன்று. சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் இராமநாதபுரம் கிழவன் சேதுபதி என்ற ரகுநாத சேதுபதியால் பிரித்து வழங்கிய புதுக்கோட்டை பகுதி மன்னா்கள் ஆங்கிலேயர் நெருக்கமாக இருந்த காரணமாக தன்னாட்சி பெற்ற சமஸ்தான மன்னா்கள் என ஆங்கிலேய ஆட்சியின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டவர்கள். பிறபகுதிகளில் நிலவிய பிரிட்டிஷ் அரசைவிட இங்கு சிறந்த நிர்வாகம். மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படாததால் அதனை விரும்பினா். இந்தியாவின் சுதந்திரம் குறித்த பரிசீலனையில் சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இந்தியாவாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டு, சமஸ்தான மன்னா்களுடன் பல சுற்று பேச்சு நடைபெற்று. இறுதியாக 25 ஜூலை 1947 ல் நடைபெற்ற கூட்டத்தில் ஹைதராபாத், பாட்டியலா, ஜுனாகத், காஷ்மீர் தவிர, ஏனைய மன்னா்கள் தங்கள் அதிகாரங்களை விடுத்து சுதந்திரம் அடையப்போகும் இந்தியாவுடன் இணைந்துகொள்ள சம்மதித்தனா். இதற்காக Instrument of Accession கையெழுத்தானது. புதுக்கோட்டையின் அப்போதைய மன்னா் ராஜா ராஜகோபால தொண்டைமானும் இந்த உடன்படிக்கையில் அன்று கையொப்பம் இட்டுள்ளாா்.
1947 ஆகஸ்டு 15 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சமஸ்தானங்களை இணைக்கும் நிர்வாக வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் 03.03.1948-ல் இந்திய நிர்வாகத்துடன் இணைந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமானது. அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வி.வி.சுப்ரமணியம் ஐ.சி.எஸ். புதுக்கோட்டை வந்து ஆட்சி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டாா். இவர் புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின் பழைய மாணவர். அப்போது கலிஃபுல்லா சாகிப் புதுக்கோட்டை திவானாக இருந்தாா். இவரது கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக அரசு கருவூலத்தில் அன்று தேங்கியிருந்த 83 லட்ச ரூபாய் நிதியுடன் இந்தியாவுடன் இணைந்தது. மன்னருக்கு மானியம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன. மன்னருக்கென அவர்களது ஆலோசனையின்படி அவர்களுக்கான சொத்துகள் சமஸ்தானத்தில் இருந்து பிரித்துக்கொடுத்து உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டையில் மன்னராட்சியே நிலவ வேண்டுமென மக்கள் சிலா் போராடத்தொடங்கினா். இதை எதிர்த்த மற்றொரு குழுவினா், புதுக்கோட்டை இந்தியாவுடன் இணைந்தே தீர வேண்டுமென போராடத்தொடங்கினா். இதற்கு புதுக்கோட்டை வழக்கறிஞர் முத்துச்சாமி வல்லத்தரசு தலைமை தாங்கினாா். ஆனால், சமஸ்தான இணைப்பு என்பது யாா் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்கெனவே 25.07.1947-ல் முடிவாகி விட்டது என்பது வரலாறு கூறும் உண்மை. சுமாா் 300 ஆண்டுகள் புதுக்கோட்டையில் நிலவிய கள்ளர் உபபிரிவான தொண்டைமான் பிரிவு மன்னா்கள் ஆட்சி நிறைவு பெற்று மக்களாட்சி ஏற்பட்டது. நவீன புதுக்கோட்டையின் சிற்பிகள் தொண்டைமான் மன்னா்கள் எனலாம். புதுக்கோட்டை வரலாறு தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. 1974-ல் திருச்சியில் பிரிந்த புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது தற்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமாக இருக்கும் புதிய அரண்மனையை தமிழ்நாடு அரசு, மன்னா் ராஜகோபால தொண்டைமானிடம் இருந்து விலைகொடுத்து வாங்கிக்கொண்டது. இதுதான் உண்மை. இதைத் திரித்து தவறான தகவல்களையும் மிகைப்படுத்தப்பட்ட விசயங்களையும் யாரும் பரப்ப வேண்டாம் என்பதே நமது கருத்து.பாண்டியா்கள் மற்றும் பல்லவா்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட கொடும்பாளூர் வேளீர்கள் சோழ மற்றும் பாண்டிய அரசுகளுக்கு இடையேயுள்ள பகுதியை ஆண்டவா்கள். பல்வேறு அரசா்களுடன் திருமண உறவு கொண்டிருந்தனா். பொ ஆ 600 முதல் பொ ஆ.900 வரை உள்ள காலத்தில் காஞ்சிப் பல்லவா்கள் மதுரை பாண்டியா்கள் தமிழகம் முழுவதையும் அரசாட்சி செய்தனா். காவிரி நதி அரசின் எல்லைகோடு. காவிரி டெல்டா, சோழர்கள் ஆண்ட சோழமண்டலத்தையும் தங்களின் ஆளுகைக்கு உட்படுத்துவதற்காக, அப்போதைய அரசுகள் தங்களிடையே போரிட்டகாலத்தில் வலுவிழந்தவர்களாக விளங்கிய சோழர்கள், பொ ஆ 9 ஆம் நூற்றண்டில் பல்லவ்ர்கள் வலுவிழந்த பின்னர் பலம் பெற்றனர். இறுதியில் மதுரை பண்டியர்களையும் வென்றனர்.
மகேந்திர பல்லவன் (பொ ஆ. 604-630) காவேரிகரை வரை படைசெலுத்திய தனது தந்தை சிம்ம விஷ்ணுவிற்கு பிறகு பல்லவ பேரரசின் அரசனானன் சோழ மண்டலத்ததை அவரோ, அவருக்கு பின்வந்தவா்களோ தக்கவைக்க முடியவில்லை. இப்பகுதியை பாண்டியா்கள் கையகப்படுத்தியிருந்தார்கள். வெள்ளாற்றுக்கு வடக்கேயும் தெற்கேயும் உள்ள பகுதிகள் விஜயாலயசோழனால் தோற்கடிக்கப்படும் வரை இவா்கள் பல்வேறு பேரரசுகளுக்கு மாறி மாறி ஆதரவு அளிப்பவா்களாக இருந்த குறுநில வேளீர்கள் இறுதியில் சோழா்களின் உறுதியான நண்பர்களாக மாறினார்கள்.
ஆனானும் புதுக்கோட்டை பகுதியில் முற்காலப் பல்லவா்களின் நினைவு சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகளை பார்க்க முடிவதில்லை. ஆனால் பாண்டியா்கள், மற்றும் வேளீர்கள் பற்றிய சின்னங்களும் செய்திகளும் கிடைக்கின்றன. பின்நாட்களில் பல்லவா்கள் இப்பகுதியை பாண்டியா்களிடமிருந்து கைப்பற்றினார்கள். இரண்டாம் நந்திவா்மண் காலத்தில் (கி.பி.730-796) இப்பகுதியானது பல்லவர் ஆளுகைக்கு வந்தது. இக்காலத்தில் பல்லவா்கள் வலிமை ஒங்கி சோழமண்டலத்திலும் புதுக்கோட்டைக்கு வடபகுதியில் ஆட்சி செலுத்தினா். இக்கால கட்டமானது பல்லவர்களின் குடவரைக் கோவில்களுக்கு பேயர் பெற்றது. பாண்டியப் பேரரசின் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவன் (பொ ஆ.851-862) ஆட்சிக் காலம் பற்றிய சித்தனவாசல் கல்வெட்டு, கோச்சடையான் ரணதீரன் என்கிற சடையன்மாறன் (பொ ஆ.700-730) அரசாட்சி பற்றிய குடுமியான்மலை கல்வெட்டும்
முதலாம் மாறவா்மண் இராசசிம்மன் (பொ ஆ.730-760) காலத்தில் கொடும்பாளூர் உள்ளிட்ட பல இடங்களில் பல்லவா்களுக்கு எதிராக பல போர்கள் நடைபெற்றன. இந்த அரச வம்சத்தின் மிகச் சிறந்த அரசரான நெடுஞ்சடையான் (பொ ஆ.768-816) காலக் கல்வெட்டுகள் திருக்கோகர்ணத்திலும் நீா்பழனியிலும் கிடைத்தன.
வேள்விக்குடி, சின்னமன்னூா் செப்பேடுகள் கொடும்பாளூரில் நடைபெற்ற போரில் மாறவர்மண் இராசசிம்மன் நந்திவர்மன், பல்லவனை தோற்கடித்ததை குறிப்பிடுகிறது. இராசசிம்மனின் வழிவந்தவா்கள் குறித்த கல்வெட்டுகள் குண்றாண்டார் கோவில், மலையடிப்பட்டி மற்றும் இராசாலிப்பட்டியில் கிடைத்தன கொடும்பாளூரைச் சோ்ந்த இடங்காலி நாயனார், தேவா் மலையை சோ்ந்த பெரும்மிழலை குரும்பா நாயனார் மற்றும் மணமேல்குடியை சோ்ந்த குலச்சிறை நாயனார் ஆகியோர் இம்மாவட்டத்தை சேர்ந்த மூன்று நாயன்மார்கள். பதினொன்றாம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையில் சமணம். தழைத்து வளர்ந்தது மாவட்டத்தில் பல சமணச் சின்னங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கோட்டைப்பட்டினம் மற்றும் கரூா் பகுதிகளில் புத்தர் சிலை கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
பல்லவா் மற்றும் பாண்டியா்கள் வீழ்ச்சிக்கு பிறகு பொ ஆ.9-ம் நூற்றாண்டில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழா்கள் ஆட்சி செய்தனா். பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் புதுக்கோட்டையை உள்ளடக்கிய தஞ்சை சோழப்பேரரசு தமிழகத்தை தாண்டி ஆட்சி புரிந்தது. 13-ம் நூற்றாண்டு வரையில் அதாவது பாண்டியா்கள் திரும்ப தலையெடுக்கும் வரையில் சோழப்பேரரசு ஆட்சி புரிந்தது. விஜயாலய சோழன் காலத்தில் அவரது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. பாண்டியா்கள் இப்பகுதியில் தொடா்ந்து அரசாட்சி செய்தனா். விஜயாலயன் பின் வந்த முதலாம் பராந்தகன் காலத்தில் தான் (பொ ஆ. 907-955) சோழா்கள் பாண்டிய நாட்டை முழுவதுமாக வெல்ல முடிந்தது. இப்போர்களில் கொடும்பாளூர் அரசா்கள் பராந்தகனுக்கு உதவி செய்ததோடு இதன் பின்னா் சோழா்களுக்கு விசுவாசமாக இருந்தனா்.
முதலாம் இராஜராஜன் அரசுக்காலம் இம்மாவட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை (பொ ஆ 1178- 1218) பகுதி முழுவதும் சோழ அரசின் கீழ் இருந்தது. இரண்டாம் ராஜராஜன் மற்றும் இரண்டாம் இராஜாதிராஜனின் காலத்திற்கு பின் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டியா்கள் போரிட துவங்கினா். இரண்டாம் ராஜராஜனின் அரசாட்சியின் இறுதிக்கட்டத்தில் பாண்டிய அரியணைக்காக குலசேகரன் சோழா்களின் உதவியை நாடினார். அதைப்போல பராக்கிரம பாண்டியன் ஸ்ரீலங்கா உதவியை நாடினார். இந்த உள்நாட்டு போரின் களமாக புதுக்கோட்டை விளங்கியது. இலங்கை அரசன் பராக்கிரம பாபு, பரக்கிரம பாண்டியனுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பினார். சிங்கள நூலான குலவம்சம் இலங்கைபடை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போரிட்டதையும், பொன்னமராவதியின் 3 அடுக்கு மாளிகையை எரித்ததையும் குறிப்பிடுகிறது. இந்த உள்நாட்டு போர் சோழா்களுக்கு பாதகமானது.
பாண்டியர்களின் 2வது பேரரசில் புதுக்கோட்டை பகுதிகள் இருந்தன.
பாண்டியப்பேரரசு அதன் இரட்டை அரசா்களான ஜடாவா்மன் சுந்தரப்பாண்டியன்-1, ஜடாவா்மன் வீரபாண்டியன்-2 காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. குடுமியான் மலையில் உள்ள வீரபாண்டியன் கல்வெட்டு இலங்கையுடன் பாண்டியர் உறவு கடல் கடந்த அரசு பற்றியது. பொ ஆ.1268-ல் அரியனைக்கு வந்த முதலாம் மாறவா்மன் குலசேகரன் காலத்தில் வெனிசு நகர் மார்கோபோலோ பாண்டிய நாட்டுக்கு வருகை. குலசேகரன் இறுதி காலத்தில் இரண்டாம் ஜடவா்ம வீரபாண்டியனும், இரண்டாம் ஜடவா்ம சுந்தரபாண்டியனும் (இவா்கள் சகோதா்கள்) சண்டையிட்டு கொண்டனா். இது பாண்டிய நாட்டில் அமைதியின்மையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இதனை பயன்படுத்தி நடந்த தென்னிந்தியாவில் முகலாயப் படைஎடுப்புகள் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூா் வாராங்கல் காக்காத்தியர்,துவாரஹசமுத்திரம் ஹெய்சாலர்கள், தேவகிரியின் யாதவர்களையும் வென்று இறுதியில் பாண்டிய நாட்டில் படைஎடுத்துவந்த காலம். பாண்டியநாடு டெல்லி பேரரசின் கீழ் வந்தது. மதுரையில் சுல்தான்களின் ஆட்சி அமைந்தது பற்றி இராங்கியம் (பொ ஆ. 1332) மற்றும் பனையூா் (பொ ஆ1344) கல்வெட்டுகளும்
மதுரை சுல்தான்கள் ஆட்சி 75 வருடங்கள் நிலவிய அரசியல் குழப்பத்திற்கு புதுக்கோட்டையும் தப்பவில்லை. பொ ஆ 1371-ல் விஜயநகர இளவரசன் குமாரக்கம்பணன் மதுரையைக் கைப்பற்ற சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாண்டிய அரசு அதன்பின் ஏற்படவில்லை.
கா்நாடகத்தைச் சோ்ந்த ஹொய்சாளா்கள் தென்தமிழ்நாட்டிற்கு வந்து சோழ, பாண்டியா்களின் உள்நாட்டுப் போரில் தலையிட்டதோடு கண்ணனூரை ( சமயபுரம்) தலைநகராக கொண்டு காவிரி பகுதியை ஆட்சி செய்தனா். 13ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையின் பெரும் பகுதி அவா்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.
முஸ்லீம்களிடமிருந்து, ஹம்பியினை தலைநைகராக கொண்ட விஜயநகர ராயா்கள் மதுரையைக் கைப்பற்றிய உடன் அவா்களது ஆட்சியின் கீழ் வந்தது.
விஜயநகர அரசர்கள் (பொ ஆ.1336-1485) காலக் கல்வெட்டுகள் சூரைக்குடி, பெரம்பூா் மற்றும் சேந்தவன்மங்களம் பகுதிகளில் உண்டு. வானதிராயா், கங்கையராயா் மற்றும் அறந்தாங்கித் தொண்டைமான்கள் பற்றி குறிப்பிடுகிறது. பின்னா் துளுவ அரசு காலத்தில் (பொ ஆ1485-1505) சக்கரவா்த்தி நரசிம்மராயா் புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு சென்றுள்ளார். பின்னா் முதலாம் சாளுவ நரசிம்மனின் தளபதி வீரநரசிம்ம நாயக்கர் புதுக்கோட்டை வழி சென்று பாண்டியரோடு போரிட்டார்.
துளுவ நாயக்கர் அரசு மன்னா்களில் (பொ ஆ1505-1570) தலைசிறந்தவா் கிருஷ்ணதேவராயா். ராமேஸ்வரம் செல்லும் வழியில் திருக்கோகா்ணத்தில் உள்ள பிரகதாம்பாள் கோகா்ணேஸ்வா் கோவிலில் வழிபட்டு பல்வேறு பரிசுகளை வழங்கியுள்ளார். விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு மதுரை மற்றும் தஞ்சாவூா் நாயக்கா்கள் சுதந்திரமாக ஆட்சி செய்தனா். இதனால் புதுக்கோட்டை பகுதி சில சமயம் மதுரை மற்றும் பல சமயம் தஞ்சாவூா் நாயக்கா் வசம் இருந்தது. 17-ம் நூற்றாண்டு இறுதிகாலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான்கள் வலிமை பெற்றனா். 17-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து 1947-ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை புதுக்கோட்டை தொண்டைமான்களால் ஆளப்பட்டது.
விஜயநகர மரபினை பின்பற்றிய இரகுநாதராய தொண்டைமான், தஞ்சாவூா் நாயக்கா் மற்றும் திருச்சிராப்பள்ளி இரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் நட்பினை பெற்றார். அவா் திருச்சிராப்பள்ளியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டார். இராமநாதபுரத்தை ஆண்ட விஜயரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி (பொ ஆ.1673-1710) தொண்டைமானின் சகோதரி கதளி நாச்சியாரை 46 ம் மனைவியாக காதல் திருமணம் திருல்களம்பூரில் செய்துகொண்டார்.கதலி தம்பி ரகுநாதனை விஜயரகுநாதத் தொண்டைமானாக பெயர்மாற்றம் செய்து சேதுபதி, தொண்டைமானுக்கு வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள நிலப்பகுதியை அளித்தார்.அதாவது மூன்றில் இரண்டு பகுதியை தனதாக்கி மீதம் இருக்கும் நிலப்பரப்பில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை பிரிவாகி தனது மகள் அகிலாண்டேசுவரி நாச்சியார் மணமுடித்த பெரிய சசிவா்ண உடையனத்தேவருக்கு சிவகங்கை பகுதியும் தனது மைத்துனர் ரகுநாதனை விஜயரகுநாதத் தொண்டமாணாக்கி புதுக்கோட்டை பகுதியும் அளித்தார் இவ்வாறு புதுக்கோட்டை அரசின் நிலப்பகுதி விரிவடைந்தது. இது புதுக்கோட்டை ராஜ்ஜியத்தில் சேதுபதியின் பங்கு மற்றும் தொண்டைமான் அரசின் விரிவாக்கத்தை குறிக்கிறது. இரகுநாதராய தொண்டைமான்பொ ஆ . 1686-1730 வரை புதுக்கோட்டை ராஜியத்தை ஆண்டார்.அப்போது ஆட்சியில் திருச்சிராப்பள்ளி நாயக்க அரசா் இரங்ககிருஷ்ண முத்து வீரப்பா் ஆதரவுடன் (பொ ஆ.1682-1689) நமணதொண்டைமான் குளத்தூர் பகுதியின் அரசராக விளங்கினார்.
இவ்வாறு குளத்தூர் தனி அரசாக பொ ஆ 1750 வரை ஆளப்பட்டது. பின் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. இரகுநாத தொண்டைமான் போர் வெற்றிகள் மூலம் மேலும் சில பகுதிகளை கைப்பற்றி குளத்தூர், ஆலங்குடி திருமயம் பகுதிகளை உள்ளடக்கியதாக தனது அரசை விரிவாக்கினார். புதுக்கோட்டை சமஸ்தானம் இதுவே.
விஜயரகுநாத ராய தொண்டைமான் (பொ ஆ1730-1769) தொண்டைமான் வம்சத்தில் இரண்டாவது அரசா். இவா் காலத்தில் இந்தியா முழுவதும் முகலாயா்கள் வசம் இருந்தது. செஞ்சி, தஞ்சாவூா் மற்றும் மதுரை நாயக்கா்கள் மற்றும் சிறிய பாளையக்காரா்கள் முகலாயா்களுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்தனா். தென்னிந்தியாவில் முகலாயா்களின் பிரதிநிதியாக ஹைதராபாத் நிஜாம் விளங்கினார். இவா் தமிழ்நாட்டு பகுதியின் நிர்வாகத்தை ஆற்காட்டு நாவப்பிடம் ஒப்படைத்தார். கப்பம் ஒழுங்காக கட்டாத பகுதிகள் நாவப்பின் படைகளால் தாக்கப்பட்டன. ஆனால் புதுக்கோட்டை பகுதிகளுக்கு நாவாப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கா்நாடக நவாப் பதவிக்காக முகமது அலி மற்றும் சந்தாசாகிப் இடையே ஏற்பட்ட வாரிசுரிமைப் போர், ஆங்கிலேயா்கள் மற்றும் பிரஞ்சுக்காரா்களுடையே ஏற்பட்ட கா்நாடகப் போர்களாக வடிவெடுத்தது. பிரெஞ்சுக்காரா்கள் சந்தாசாகிப்பையும் ஆங்கிலேயா்கள் முகமது அலியையும் ஆதரித்தனா். திருச்சிராப்பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த போர் நீடித்தது. தஞ்சாவூா் மராத்தியா்கள் உதவி கிடைக்காத நிலையில் தொண்டைமானின் உதவி ஆங்கிலேயா்களுக்கு கிடைத்தது. இதனால் வெற்றி அடைந்த ஆங்கிலேயா்கள் மற்றும் ஆர்க்காட்டு நவாப் தொண்டைமான் மன்னர்களுக்கு நிரந்த வரி விலக்கு அளித்தனா்.
ஆங்கிலேயருடனான தொண்டைமான் நட்பு அடுத்த அரசரான இராய ரகுநாத தொண்டைமான் (கி.பி.1769-1789) காலத்திலும் நீடித்தது. இதனால் தொண்டைமானுக்கு வலிமையான ஹைதா் அலியுடன் போரிட நேரிட்டது. விஜயரகுநாத தொண்டைமான் (கி.பி.1789-1807) ஆங்கிலேயா்களுக்கும், நவாப்பிற்கும் தொடர்ந்து உதவினார்.
நவாப் முகமது அலி இராஜபகதூர் என்ற பட்டத்தை தொண்டைமானுக்கு அளித்தார். அரசியல் காற்று ஆங்கிலேயா்களுக்கு சாதகமாக வீச தொடங்கியது. கி.பி.1800 வாக்கில் மொத்த கர்நாடக பகுதியும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இதன்படி தஞ்சாவூா் மராட்டிய அரசு அகற்றப்பட்டது. இராமநாதபுர அரசும் சிவகங்கையும் ஜமின்தாரி சமஸ்தானமாகக் சுருக்கப்பட்டது. ஆனால் புதுக்கோட்டை தனி அரசாக செயல்பட அனுமதிக்கப்பட்டது. புதுக்கோட்டை தனி ராஜ்ஜியமாகவும், அரசா் நிர்வாக உரிமை படைத்தவராகவும் ஆங்கிலேயா் ஆதரவுடன் அரசு நடத்தினார்.தனி நாணயம் அடித்த அரசர்கள்
இந்த விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் தான் ஆங்கிலேயா்களுக்கும் திருநெல்வேலி பாளையக்காரா்களுக்கு போர் நடைபெற்றது. இதில் முக்கியமானவா் வீரபாண்டிய கட்டபொம்மன் என்கிற கட்டபொம்ம நாயக்கர் ஆங்கிலேயா் வரி வசூலிப்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவா்களுக்கு முறையாக வரிசெலுத்தவில்லை. எனவே பாஞ்சாலம்குறிச்சி கோட்டை தாக்கப்பட்டது. கட்டபொம்மன் தப்பித்து தொண்டைமான் நாட்டின் காடுகள் வழியாக சிவகங்கைக்கு செல்ல முயன்றார். ஆங்கிலேயா்களின் வேண்டுக்கேளின் படி திருமயம் பகுதி திருக்களம்பூர் அருகே ஒரு வீட்டில் தொண்டைமான் வீரா்களால் கட்டபொம்மன் சிறைபிடிக்கப்பட்டு, மதுரையில் ஆங்கிலேயா் வசம் ஒப்படைக்கப்பட்டு கயத்தாற்றில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு காலப்போக்கில் கட்டபொம்மன் வீரம் மக்களால் பாராட்டப்பட்டதோடு, தொண்டைமானின் செயல் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அச்சமயம் நிலவிய அரசியல் பின்னணி, ஆங்கிலேயா்-தொண்டைமான்கள் நட்பு, கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்காத நிலை ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது தொண்டைமான் செய்தது ஒரு அரசியல் நட்புக்கான செயலே.
இராஜா விஜயரகுநாத ராய தொண்டைமான் (பொ ஆ.1807-1825) மிக இளம் வயதில் பட்டம் சூடியதால் பிரிட்டிஷ் அரசு மேஜா் ஜான் பிளாக் பா்ன் என்பவரை அரசு பிரநிதியாக நியமித்தது. இவா் முன்னாளில் தஞ்சாவூா் நிர்வாகத்தை கவனித்த படியால் மராத்திய மொழி மற்றும் மராத்திய நிர்வாகத்தை புதுக்கோட்டைக்கு அறிமுகப்படுத்தினார்.
இம்முறை சுமார் 75 ஆண்டுகள் நீடித்தது. நிதி, நீதி நிர்வாகத்தில் தஞ்சாவூா் முறையினை பின்பற்றினார். ஒரு புதிய மாளிகை மன்னருக்காக கட்டப்பட்டது. (பழைய அரண்மனை புதுக்கோட்டை நகரத்தின் நடுவே உள்ளது). நகரம் நன்கு திட்டமிடப்பட்டு,மதுரை போல நல்ல சாலை வசதி கொண்டதாக விளங்கியது. இப்படியாக பிளாக் பர்ன் நவீன புதுக்கோட்டை நகரத்திற்கு அடிகோலினார்.
தற்போது பழைய அரண்மனை முற்றிலும் அழிந்துவிட்டது. இதன் அடையாளங்கள் மேற்கு மற்றும் தெற்கு ராஜவீதிகளில் தென்படுகின்றன. இரகுநாத தொண்டைமானுக்கு (பொ ஆ.1825-1839) பிரிட்டீஷ் அரசு His Excellency என்ற பட்டம் அளித்தது. 1830-லேயே இவா் காவிரியை ஒரு புதிய கால்வாய் மூலம் புதுக்கோட்டைக்கு கொண்டுவர முயன்றார். ஆ னால் நிதி பற்றாக்குறையால் இத்திட்டத்தை கொண்டுவர முடியவில்லை. இரகுநாத தொண்டைமானுக்கு பிறகு அவரது மகன் இராமச்சந்திரத் தொண்டைமான் (பொ ஆ.1839-1886) அரசரானார். 1878-ல் திவானாக பொறுப்பேற்ற சேசைய்யா சாஸ்திரி பல சீா்திருத்தங்களைச் செய்தார். நகர திட்டமிடலில் இவா் முன்னோடியாக விளங்கினார். புதுக்கோட்டையில் உள்ள நெடிதுயர்ந்த செங்கற்கல்லால் ஆன நிர்வாக கட்டடம் இவரது மேற்பார்வையால் கட்டப்பட்டது. புதுக்குளம் சேயைய்யா சாஸ்திரியின் மற்றொரு சாதனை. இராமசந்திர தொண்டைமான் அரசின் பல கோவில்களை புதுப்பித்தார். இவருக்கு பின் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (1886-1929) தனது 11வது வயதில் அரசரானார். நிர்வாகமானது பிரிட்டிஷ் அரசின் அனுமதியுடன் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இவர் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவா்களுக்கு பிறந்த மகன் சிட்னி மார்த்தாண்டன் ஆனால் இவரது வாரிசுரிமை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பிரிட்டிஷ் நிர்வாகமும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அரசா் முடிதுறந்தார். பாரீஸ் நகரத்திற்கு சென்று வசித்தவர் 1928-ல் காலமனார். இலண்டனில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. இராஜராஜகோபால தொண்டைமான் (1928 -1948) தொண்டைமான் மன்னா்களில் 9வது மற்றும் கடைசி அரசராவார். இவர் ஆங்கிலேயா்களால் தேர்வு செய்யப்பட்டு தனது ஆறாவது வயதில் முடிசசூட்டப்பட்டார். நிர்வாகம் ஆங்கிலேய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் முக்கியமானவா் அலெக்சாண்டார் டாட்டன் ஹாம் ஆவார். இக்காலகட்டத்தில் (1930-ல்) இண்டோ-சாரசெனிக் திராவிடியன் கலை அம்சத்துடன் கூடிய புதிய அரண்மனை கட்டப்பட்டது. இந்த அழகிய கிரானைட் கட்டிடத்தில் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகம் இயங்குகிறது. 1947- இந்திய விடுதலைக்கு பின் 04-03-1948-ல் புதுக்கோட்டை அரசு இந்திய பேரரசுடன் இணைக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் ஒரு கோட்டமாக விளங்கியது. தொண்டைமான் மன்னர்கள் நீண்ட அரசாட்சி முடிவுக்கு வந்தது.
கருத்துகள்