முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகாதாரத்துறையின் தற்போதய ஊடக செய்தி அறிக்கை

            மத்திய சுகாதாரத்துறை புதிதாக வெளியிட்ட ஒரு ஊடக செய்தி அறிக்கை பொதுமக்களின்  தகவலுக்காக வழங்கப்படுகிறது .நாளை ஜனதா  ஊரடங்கு.. தமிழகத்தில் எது இயங்கும். இயங்காது.என தகவல்  தெரிந்து கொள்வது நல்லது கொரானா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக போரில் ஏற்பட்டது போல் இருக்கிறது. வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நாள் மட்டும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊரடங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்கு கடைப்பிடிக்கப்படும்.
மதுக்கடைகள், அனைத்து சிறு, பெரியகடைகள். கோயம்பேடு மார்க்கெட்.  மெட்ரோ ரயில்கள், பயணிகள் ரயில்கள்.  ரேஷன் கடைகள்.          அரசு, தனியார் பேருந்துகள்.  உள்ளூர் விமானங்கள் . கேன் குடிநீர் கடைகள்,  உணவகங்கள். லாரிகள், ஆட்டோ கால் டாக்சிகள்.  வாரச்சந்தைகள்இது இயங்காது 
மருத்துவமனைகள்.மருந்துக்கடைகள் . அம்மா உணவகங்கள். ஆம்புலன்ஸ் சேவை. பெட்ரோல் பங்க்குகள். ஆவின் பால் விநியோகம்.இவை இயங்கும் எனற நிலை.தனிமை  கண்காணிப்பை மீறினால் 6 மாத சிறை தண்டனைகொரானாவுக் காக தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்போர் அதை மீறினால், 6 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கொரானா பாதிப்பிருப்போர் மருத்துவமனையில் தனிவார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் படுவதுபோல, அவர்களின் உறவினர்கள், கொரோனோ அறிகுறி, கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வருவோர் ஆகியோர் வீடுகளில் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.இதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த 2 குழந்தைகள் உட்பட 155  பயணி களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் அவர்களில் எவருக்கும் அறிகுறிகள் இல்லை எனத் தெரியவந்தது.  இருந்தாலும் குறிப்பிட்ட நாட்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க அவர்கள் அறிவுறுத்த ப்பட்டனர்.எந்த தேதி வரை அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில் அழியாத மையைக் கொண்டு அவர்களின் கைகளில் முத்திரையிடப்பட்டது. மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வது அரசு பேருந்துகளில் பயணிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இதுபோல தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்பட்ட போதிலும், அதிலிருந்து சிலர் தப்பிச் சென்று வெளியே நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதனால் கொரோனோ பரவும் அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு, கண்காணிப்பை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.தொற்று நோய் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரங்கள், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.மத்திய அரசின் அறிவுரைகள், வழிகாட்டுதல்களை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், தனிமை கண்காணிப்பு, சமூக விலகல் ஆகியவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...