தமிழக அரசு 144 தடையுத்தரவு அறிவித்த கையோடு மாவட்ட எல்லைகளை உடனடியாக மூடி இருக்க வேண்டும் இன்று மாலை வரைக்கும் போக்குவரத்தை தளர்த்தியது தவறு.
கோயம்பேட்டில் அடித்து பிடித்துக் கும்பல் கும்பலாக ஊருக்கு கிளம்பும் போது மக்களை பார்த்தால் பீதி கிளம்புகிறது.
நகரங்களோடு நின்று இருக்க வேண்டியதை தற்போது கிராமங்கள் தோறும் பரப்பப் போகிறார்கள்.
கவனமாக இருக்கும் இடங்களிலேயே இருங்கள்.எனக் கூறாத காரணம் இப்போதைக்கு ஊருக்கு போகாதீர்கள். இத்தாலி மக்கள் செய்த தவறை விட அதிகமாக செய்த நம் மக்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் நேற்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர்களுக்கு குறைவில்லாமல் வெளியேறியுள்ளனர். , நபர்கள் மூலம் ஈரப்பதமான காற்றில்
நோய் பரவும் விதமோ அபாயமோ தெரியாமல், கைத்தட்டிக் கொண்டு கூட்டம் கூட்டமாய் ஊர்வலம் போன வட மாநில கும்பலைப் பார்த்து கோபப்பட்டவர்கள்.
இன்று அதைவிட மோசமான சூழல் உறுவாக அரசே சென்னையில் இந்த நிலை உருவாக்கியது தான் வேதனையானது. சென்னையை விட்டுக் கூட்டம் கூட்டமாக கூடி முந்தியடித்துக் கொண்டும், படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், மக்கள் பயணமாகி வெளியேறுவதற்கான அவசரத்தினை உருவாக்கியிருக்கிறது. இன்று மாலை வரை பேருந்துகள் இருக்கும், அதற்குள் எப்படியாவது வெளியேறி விடுங்களென்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
கூட்டம் கூடக் கூடாது என எந்த காரணத்திற்காக இத்தனை நாள் கவலைப்பட்டோமா, அதற்கான சூழலை இன்று அரசே உருவாக்கித் தந்திருக்கிறது.
நோய்த்தாக்குதல் தமிழ்நாடு முழுதும் விரிந்து பரவுவதற்கான சூழலை சரியான நிர்வாகத் திறனற்ற முறையால் அரசு உருவாக்கியிருக்கிறதோ என்ற கவலை பலரும் அறிவதே.தடை அதை உடை நேரக்காப்பாளர் காட்டில் பண மழை.இதுவே நேற்று நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்