பாண்டிய நாட்டின் சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலம் திருக்கோட்டியூர் பாண்டிய மன்னரின் அமைச்சராக இருந்த செல்வநம்பி பிறந்த ஊர் ஆதலால் இங்கு மன்னர் அதிகக் கொடைகள் கொடுத்த வரலாறு உண்டு, ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற ஆலயம், இராமானுசர் இங்கு நம்பியிடம் உபதேசம் பெற்ற ஸ்தலம். பட்மங்கலத்தில் அருளும் கதம்ப மகரிஷியான அடைக்கலம் காத்த அய்யனாருக்கு மும்மூர்த்திகள் காட்சிதந்த ஸ்தலம் திருக்கோஷ்டியூர். ''வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே''ஏனவும், ''தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே''ஏனவும், '' குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்'' எனவும், ''பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே மணிதிகழும் வண்தடக்கை மால்.''எனவும், ''விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு''எனவும், ஆழ்வார்களால் புகழப்படும் அருள்மிகு சௌமியநாரயணப் பெருமான் திருமாளாகத் துயில் கொள்ளும் திருக்கோஷ்டியூரில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமாதத் தெப்பத்திருநாள் இன்று.சிவகங்கை சமஸ்தானத்தின் 108 ஆலயங்களில் முக்கியமான ஸ்தலம் மேதகு இராணியார் மதுராந்தகி நாச்சியார் மேற்பார்வையில் விழா சிறப்பாக நடக்கிறது அனைவரும் சென்று அருள்பெருக.ஆலயத்தின் வரலாற்றுப் பெருமை பல...அதில் தொன்மையான விபரம் உண்டு .. 'பிரம்மாவிடம் வரம் பெற்ற ஹிரண்யாசுரன் தேவர்களை தொடர்ந்துந துன்புறுத்த தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட
இரண்யனை வதம் செய்வதற்கு ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும்
பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும்
எனக் கூற கோரிக்கையை ஏற்றார்.
இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டித் தவமிருக்குமிடத்தில், எவ்விதத் தொந்தரவும் இருக்கக்கூடாது என வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை
தேர்ந்தெடுத்த மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை
அழிக்கப்போவதாக கூற
மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்குக்
காட்டும்படி வேண்ட, முன்பே நரசிம்மர் அவதாரம் காட்டிட, மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியரும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற,
கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளி
எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்ட கூடிய(கோஷ்டி) ஸ்தலம் என்பதால்
திருக்கோஷ்டியூர்' எனப் பெயர்.
தேவலோக சிற்பி விஸ்வகர்மா, அசுரர்களின் சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்ததாக வரலாறு அவர்கள் சிலைகள் சிவன் சன்னதி எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விமானம் மூன்று தளங்களாக உள்ளது.கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோகபெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர்(திருப்பாற்கடல்
பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக
பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்டப்பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருள்கிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி உண்டு.
சௌமியநாராயணப் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன்,
புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தானக் கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார்.
இவர் "பிரார்த்தனைக் கண்ணன்'
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம்
கிடைப்பதாக நம்பிக்கை .மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும்வரையில்,
இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தேவலோகத்தில் பூஜித்த சௌமியநாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில்
உற்சவராக இருக்கிறார்.இவரது
பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார் இவரையும் சேர்த்து
மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெரியாழ்வார்,திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஸதலம்.
அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில்
ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர்,
இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்புலிங்கம் உண்டு புருரூபசக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்ததால் அமைத்த
ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை "மகாமககிணறு' என அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக
விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும்.
இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம்
பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, "யார்?'
என்று கேட்க, "நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,'' என்றார். நம்பி
வீட்டிற்குள்ளிருந்தே, "நான் செத்து வா!' என்றார். புரியாதராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர்
வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர்
"அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, "ஓம் நமோநாராயணாய'
என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும்
கூற, ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள
வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து
மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து
கொள்ள. அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள்
நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார்.
மகிழ்ந்த நம்பி "நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்' என்று சொல்லி கட்டித்தழுவிக் கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில்
அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு
இருக்கிறது. இந்த வீடு "கல்திருமாளிகை'என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில்
நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.பாண்டியர். ,சோழரஸ மதுரை நாயக்கர் மன்னர்கள் ஆட்சியில் திருக்குளம் உள்பட பல திருப்பணிகள் நடந்த வரலாறு கல்வெட்டுகள் உள்ளன .
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்