செய்தி :கீரவாணி இளையராஜா பொன்னமராவதி அருகே 14 கி.மீ தொலைவில் உள்ளது பாரி ஆண்ட பறம்பு மலை. பிரான்மலையில் 2500 அடி உயரத்தில் காட்டு தீ பரவியது, கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வர தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புதுக்கோட்டை - சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் வரலாறு சிறப்பு மிக்க மலைப்பகுதி பிரான்மலையாகும் 3750 அடி உயரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதியில் 2500 அடி உயரத்தில் காட்டு தீ ஆனது நேற்று மாலை 6 மணியளவில் கண்டறியபட்டு சிங்கம்புணரி மற்றும் பொன்னமராவதி தீயணைப்பு துறையினர்க்கு தகவல் கொடுக்கபட்டு கிராம மக்கள் உதவியுடன் தீயனைப்பு நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையான 7 பேர் கொண்ட தீயணப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்கள் மலைப்பகுதிக்கு சென்று காட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சிங்கம்புணரி வட்டாச்சியர் பஞ்சவர்ணம், சரக வன அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழு முகாமிட்டுள்ளனர், மாவட்ட கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரன் தீவிர முயற்சியால் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் அவர்களுக்குத் தகவல் கொடுத்து துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இரவுக்குள் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பிரான்மலையைச் சுற்றியுள்ள ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று திரண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்