இன்று பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தாவின் பிறந்த நாள்
1927-ம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர்.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா.இவர் தனது குருவாக டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை போற்றுகிறார்.12 படுக்கைகளுடன் மட்டுமே இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.இவர் புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்து வர்களுக்கு வழிகாட்டியாக செயலாற்றி வருகின்ற இவர் இன்று 92வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்