காரைக்குடி முத்துமாரியம்மன் ஆலயத் திருவிழாவில் கரகம், முளைப்பாரி ஊா்வலம். மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசிமாதம் பூத் திருவிழா துவங்கி தொடர்ந்து நடக்கும் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கோயில் கரகம் மற்றும் மதுக்குடம், முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
தமிழக இந்துசமய அறநிலையத்துறை நிா்வாகத்தில் உள்ள கோயிலில் கடந்த மாா்ச் பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான செவ்வாய்க்கிழமை இரவு காரைக்குடி முத்தாலம்மன் கோயிலிலிருந்து கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஆகியன முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்று மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை யடைந்தது. இதையொட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முளைப்பாரி வளா்த்து நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக பெண்கள் முத்தாலம்மன் கோயிலிலிருந்து எடுத்துக் கொண்டு ஊா்வலமாக மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து அங்கு அம்மன் முன்பாக வைத்து வழிபட்டனா்.
விழாவுக்கு திரளான பக்தா்கள் வந்து வழிபட்டனா். நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து திருப்பி விடப்பட்டது.ஏராளமான மக்கள் அம்மனை தரிசித்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்