கொரானா பரவல் விரைவில் குறையும்- நோபல் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் நம்பிக்கை
கொரோனா நோய்த்தொற்று, உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நோய்த்தொற்று, விரைவில் முடிவுக்கு வரும் என,சீனாவின் நிலையை கணித்த நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சீனாவில், கொரோனா நோய்த்தொற்று லட்சக்கணக் கானோரை பாதிக்கும் என பல வல்லுநர்கள் கணித்தபோது, மைக்கேல் லேவிட், மிகத் துல்லியமாக தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.அதில் சீனாவில் 80 ஆயிரம் பேர் மட்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள் எனவும், அதில் 3250 பேர் வரை மட்டுமே உயிரிழக்க கூடும் என கணித்திருந்தார்.இதை மெய்ப்பிக்கும் வகையில் சீனாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 171 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3277 ஆகவும் இருந்தன இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டியில் கொரோனா நோய்த்தொற்று படிபடியாக குறையும் என கூறியுள்ளார்.
78 நாடுகளில் நாள் தோறும் 50 பேருக்கு நோய்தொற்று ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தாலியில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவியதற்கு, அந்த நாட்டில் நிலவும் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையே மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். சளி, காய்ச்சல் ஏற்பட்ட பலருக்கு கொரோனா சோதனை செய்ய முடியாமல் போனதாலேயே உயிரிழப்புகள் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச அளவில் தற்போது சீனா கையாண்ட மக்களை தனிமைப்படுத்தும் முறை கையாளப்படுவதால்,பெருமளவில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் புதிதாக உருவான வைரஸ் என்பதால், அதற்கு மருந்து கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும், எல்லாம் விரைவில் சரியாகி விடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித் திருக்கிறார் இந்த கொரோனா, லட்சக்கணக்கானோரை பலி கொல்லாது என கணித்துள்ள நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான் மைக்கேல் லேவிட் நோய்த் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியுள்ளார்.இவரைப் தற்போதய நிலையில் நோட்ரடாமஸ் என அழைக்கலாம் தானே.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்