சென்னை தி.நகர் நிலைமையா இது.கோபம், கோபமா வருகிறது.. மனதை கனக்க வைக்கும் அந்த ஒரு படம்! சென்னை என்று கூறியதும் சட்டென அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரை, சட்டசபை கட்டிடம்.. அடுத்தபடியாக தி.நகர்.
சென்னையில் உள்ள மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்.. அவ்வளவு ஏன், அண்டை மாநிலங்களில் இருந்து கூட ஷாப்பிங் செய்வதற்கான ஒரு பகுதியாக மக்கள் நினைப்பது தி.நகர்.
புடவை வேண்டுமா, நகை வேண்டுமா, செருப்பு வேண்டுமா, குண்டூசி முதல் விமானம் வரை ஒரே இடத்தில் கிடைக்கும் என்பார்களே, கிட்டத்தட்ட அது போன்ற ஒரு இடம் தான் சென்னை தி.நகர்.
கொரோனா டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் சரியில்லை.. இப்படி இருந்தால் நிலை மோசமாகும்.. நிபுணர்கள் வார்னிங்
எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும். அதிலும் பண்டிகை காலம் என்று சொல்லிவிட்டால், மேலே இருந்து ஒரு பொருளைப் போட்டால் அது தரையில் சென்று விழாது.. யாராவது ஒருவரின் தலையில் தான் விழும் என்கிற அளவுக்கு இடைவெளியின்றி மக்கள் கூட்டம், நெரிசல் காணப்படும்.
சென்னை தியாகராயநகர் இப்போது எப்படி உள்ளது,இந்தப் ஒரு புகைப்படம் போதும். அத்தனை கூட்டுக்கடைகளும், பெரிய கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் வெறிச்சோடிப்போய் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, பிறருடன் பேச வேண்டாம் என்று அரசின் எச்சரிக்கையால் கூட்டமான இடங்களைத் தவிர்க்கிறார்கள்.
இந்த நிலையில் கடையில் பணிசெய்த இளைஞர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க கூடிய ஒரு புகைப்படம் தற்போது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மைதானத்தில் விளையாட்டுப் போட்டி நடப்பது போல தி.நகரிலும் இப்படியா என்று இந்த புகைப்படம்.
நிலைமையை மக்கள் வியப்பு. புகைப்படம் எடுப்பதற்காக இவ்வாறு ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டதா, அல்லது தொடர்ந்து ஆடப் படுகிறதா என்பது தெரியவில்லை. எப்படி இருந்த. தி.நகர் இப்படி ஆகிடுச்சே என்ற எண்ணம் வருகிறது. அந்த பகுதியின் வியாபாரத்தை நம்பிக் கொண்டிருந்த எத்தனையோ, வியாபாரிகள், தொழிலாளர்கள் நிலைமை கவலையும் அச்சமும் கலந்து கொரோனா வைரஸ் மீது கோபம் வருகிறது. இதுவும் யுத்தம் தானே.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்