தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு துணை தலைவராக முன்னால் அமைச்சர் சி.பொன்னையனை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியீடு.
அ இ அ தி மு க.வின் அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளராக உள்ள சி.பொன்னையன் தற்போது வயது 79, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை திருச்செங்கோட்டிலும், கல்லூரிப் படிப்பை திருச்சியிலும், சட்டப்படிப்பை சென்னையிலும் முடித்து.1958 ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து
சட்டப்பிரிவு மற்றும் மாணவர் பிரிவுகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டம், சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்
எம்.ஜி.ஆர். மீது பற்று காரணமாக அ.தி.மு.க.வில் இணைந்தார். 1972 ஆம் ஆண்டு அ.தி.மு.க. கட்சி தொடங்கும் பணிகளில் கே.ஏ.மதியழகன், ஜஸ்டிஸ் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்தார். சர்காரியா கமிஷனிலும் அ.தி.மு.க. சார்பில் வக்கீலாக பணியாற்றி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வென்றுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சட்டத்துறை, தொழில்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையிலும் சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர்.ஜெயலலிதா ஆட்சியில் அவை முன்னவராகவும், அவைத்தலைவராகவும், அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றியவர். தற்போது திட்டக் குழு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்