சுந்தரத் தெலுங்கு வருடம் யுகாதி என்றால் யுகத்தின் ஆதி எனலாம்,
யுகாதியன்று பிரம்மன் உலகத்தைப்
படைத்ததாகக் கூறுவார்கள்.
யுகாதி தினம் கொரானா இல்லாத புதிய வேலை, கல்வி, தொழில் வெற்றி அணயவருக்கும் சிறப்பாகத் தரட்டும்.
வசந்தகாலத்தின் துவக்கமாகவும் உள்ளதால்
யுகாதியில் ஆறு சுவைகள் கொண்ட யுகாதி பச்சடி
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக செய்வார்கள். பாரம்பரிய பழக்கம் வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்பு வேப்பம்பூ, துவர்ப்பு மாங்காய், புளிப்பு புளி பானகம், உரைப்பு மிளகாயோ மிளகோ, இனிப்புக்கு வெல்லம் ஆகிய அறுசுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள்.
யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள்.
மாலையில் வாசலில் விளக்கேற்றி , கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் கொண்டுதான் இருக்கும். மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல. துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று உணர்த்தும் வகையில் யுகாதித் திருநாள்.మీ అందరికీ నూతన సంవత్సర శుభాకాంక్షలు. శ్రేయస్సు మరియు శ్రేయస్సు యొక్క ఈh సంవత్సరానికి శుభాకాంక్షలు.🌷 அனைவருக்கும் யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு ஆரோக்கியமும், செழிப்பும் கொண்ட ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.🌷publicjustice.page
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்