நாளை இரவு முதல் உள்நாட்டு விமான சேவை முற்றிலும் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!கொரோனாவிற்கு ஒரே நாளில் 650 பேர் பலி..!
அமெரிக்காவில் உயரும் பலி எண்ணிக்கை."ஈரானில் உள்ள 600 இந்தியர்களை மீட்டு வர அந்நாட்டைச் சேர்ந்த மஹான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி;
அழைத்துவரப்பட உள்ள 600 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை!"- மத்திய அரசு. கொரானா விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே முற்றும் மோதல்!
கொரானா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலின் போது சீனாவுக்கு அமெரிக்கா வழங்குவதாக அறிவித்த 750 கோடி ரூபாய் நிதி உதவி இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று சீனா கூறியிருக்கிறது.
மேலும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க ஆணையம் வழங்குவதாக அறிவித்திருந்த முக கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் மார்ச் 11 ஆம் தேதி வரை தங்களுக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை என்று சீனா கூறியுள்ளது.தங்களது நாட்டில் கொரானா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தங்களுக்கு உதவ முன் வந்ததற்கு நன்றி தெரிவித்து அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியுள்ள சீனா, உதவிப் பொருட்களை தற்போது நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு கொடுத்து உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்