டெல்லி நகரில் பஞ்சம் பிழைக்க வந்த வேற்று மாநிலத்தவர்கள் அன்றாடங் கூலிகள், தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை யிழந்து, போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் அகதிகளாக பரதேசிகள் போல நடைபயணமாக ஏராளமான எண்ணிக்கையில் இதுபோல வெளியேறிக் கொண்டுள்ளார்கள்.
இது போல இன்னும் பல நூறு மைல்கள் கால்நடையாக நடந்து சென்றால் தான் இவர்களது சொந்த ஊர்களை அடைய முடியும். ''போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு
–நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே
–
கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே,'' என்ற கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுதிய திரைப்படப் பாடல் போல. தொடரும் பயணம்..
முடிவில்லாதது. இது கொரானா வைரஸ் கொடுத்த கொடை.உயிர்பயம் இவர்களை ஓட வைக்கிறது ஊர் நோக்கி. வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த இந்தியர்களை கொரோனா வைரஸ் பிரச்சினையால் சிறப்பு விமானங்கள் மூலம் தாய் நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது.ஆனால் உள்நாட்டுக்குள்ளேயே மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்து கூலி வேலை செய்து பிழைத்து வரும் ஏழைத் தொழிலாளிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு எந்த வித ஏற்பாடுமில்லை. பல நூறு இருநூறு மைல்கள் கூட அவர்கள் மூட்டை முடிச்சுகளோடு இரவு பகலாக நடந்து செல்ல வேண்டியுள்ளது. இவர்களும் இந்தியர்கள் தானே என்ற. வினா ?ஏழுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்