தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பு.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக மார்ச் 27ஆம் தேதி நடக்கவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.தமிழகத்தில்
ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
மார்ச் 27ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் திட்டமிட்டபடி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறும் என முதல்வர் அறிவித்துள்ளார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் சில பாடங்கள் மீதமுள்ள நிலையில் அந்த அட்டவணை களில் எந்த மாற்றங்களும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்