சு மணிகண்டன், மாவட்டச் செய்தியாளர். நாகப்பட்டினம் அருகே காணாமல் போன சாமி சிலை ஆறு மாதங்களுக்கு பின் மீட்பு ,ஒருவர் கைது தனிப்படை போலீசார் நடவடிக்கை. வேளாங்கண்ணிஅருகே சின்னதும்பூர் செல்லமுத்து மாரியம்மன் கோயில் கருவறையில் இருந்த பழமை வாய்ந்த உற்சவர் சிலை, 5 குத்து விளக்குகள், 6 சொம்புகள் மற்றும் ஒரு கைவிளக்கு ஆகியவற்றை கடந்த வருட ஜூன் மாதம் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறை தனிப்படை அமைத்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் வேதாரண்யம் மறைஞாயநல்லூர் பொன்னங்காட்டைச் சேர்ந்த உதயராஜன் (வயது 30) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து விசாரனை செய்ததில் திருடு போன சிலையை திருடியது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவனது வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த மாரியம்மன் உற்சவர் சிலை, குத்து விளக்குகள், சொம்புகள் மற்றும் ஒரு கைவிளக்கு ஆகியவற்றை மீட்டனர். இது தொடர்பாக உதயராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேரைத்தேடி வருகிறார்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்