சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் மர்ம நபர் கீழ்நோக்கி வெடிகுண்டை வீசி சென்ற குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பெரும் அதிரச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே வெடிகுண்டு வீச்சு,சென்னையின் இதயப் பகுதியில் அமெரிக்க தூதரகம், வங்கி தலைமை அலுவலகங்கள், முக்கிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ளன நடந்து போகும் தூரத்தில் தான் வருமான வரித்துறை அலுவலகம், தாஜ் நட்சத்திர ஓட்டல், பார்க் ஓட்டல் என முக்கிய நட்சத்திர விடுதிகளும் உள்ளன, அத்துடன் அண்ணா மேம்பாலத்தில் இருந்து மெரினா செல்லும் சாலையில் சென்னையின் முக்கிய கல்லூரியான ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, முக்கியமான நபர்கள் வீடுகள் நிறைந்த போயஸ் கார்டன் உள்ளிட்ட பகுதியும் உள்ளது. எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும். இன்று மாலை 4..30 மணி அளவில் அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றார்.
வெடித்ததில் பலத்த சத்தம் எழ
அவர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் இறங்காமல் வீசிச்சென்ற நாட்டு வெடிகுண்டு தேனாம்பேட்டை செல்லும் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்திற்கு அருகே கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.
இவ்வளவு பெரிய சத்தத்துடன் என்ன வெடிக்கிறது என அருகில் உள்ள கடைகளில் உள்ள நபர்கள் எட்டிப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.. இந்நிலையில் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு பத்து அடி தொலைவில் இச் சம்பவம் நடந்ததால் உடனே விரைந்து வந்த காவல்துறை உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மர்ம நபர் வீசிச் சென்றது நாட்டு வெடிகுண்டு என்பதை உறுதி செய்தனர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகில் இருந்த பிரபல கார் ஷோருமின் கண்ணாடிகள் அதிர்வில் உடைந்துள்ளது. தேனாம்பேட்டை காவல்துறை உதவி ஆணையர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார். அண்ணா மேம்பாலத்தின் மேலிருந்து அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகளை மர்ம நபர் வீசிவிட்டு தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகளை அவர் ஆய்வு செய்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.குற்றவாளிகள் பிடிபட்ட பின்பு காரணம் தெரியவரும்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்