முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூரியன் அஸ்தமிக்காத நாட்டில் கொரானாவால் சோதனை

இளவரசர் சார்லஸ் ஒருபக்கம், ஒட்டுமொத்த அரச குடும்பமே மறுபக்கம் இது கொரானா செய்த வேலை. எல்லா நாடுகளில் அதிகாரம் செய்த அந்த நாட்டையும் நாட்டின் அரசர்கள் வரை கொரானா ஆதிக்கம் செய்கிறது.    உலகின் ஏழாவது பணக்கார நாடு என்று பெருமைகொநண்டதும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடும், ஒரு காலத்தில் “சூரியன் அஸ்தமிக்காத நாடு” என்று இந்தியா உள்ளிட்ட பல காலனி ஆதிக்க நாடுகளைத் தனதாதிக்கத்தின் கீழ் சுரண்டிக் கொழுத்த  நாடுமான இங்கிலாந்து இன்று கொராணா மாத்திரமல்ல பல பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருக்கிறது. அது கடந்து வந்த காலங்களில் சிறப்பான காலம் மன்னர் முதலாம் சார்லஸ் காலம் தான். சார்லஸ் ஸ்காட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் மன்னரின் இரண்டாவது மகன்.  இங்கிலாந்தின் ஆட்சியை 1603 இல் பெற்றதை அடுத்து சார்லஸ் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.  1612 ல் ஜேம்சு மன்னரின் மூத்த மகன் இளவரசர் ஹென்றி பிரெட்ரிக் இறந்துவிட  சார்ல்ஸ் இங்கிலாந்து, ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து இராஜ்ய முடி இளவரசராக அறிவிக்கப்பட்டு. 1623 இல் சார்ல்சிற்கு ஸ்பானிய ஆப்சுபூர் இளவரசியுடன் திருமணம்  தோல்வியில் முடிந்து.பின் இரண்டாண்டில் பிரான்சின் ஹென்றியெட்டா மரியாவுடன் திருமணம்.
தந்தைக்குப் பின்  முதலாம் சார்லஸ் 1625 ல்அரசனாக முடிசூடினார். சார்லசு மன்னரின் சிறப்புரிமை அதிகாரத்தைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து நாடாளுமன்றம் முனைந்ததை அடுத்து சார்லசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதல் வெடித்தது. அரசர்களின் தெய்வீக உரிமையில் நம்பிக்கை கொண்டிருந்த சார்லஸ், தனது மனசாட்சியின் படி ஆட்சி முடியும் என நினைத்தார். அரசரின் பல கொள்கைகளை நாடாளு மன்றத்தினர் எதிர்த்தனர், குறிப்பாக நாடாளுமன்ற அனுமதி இன்றி வரி வசூலித்தல், மற்றும் ஒரு கொடுமையான, கேட்பாரற்ற அரசரின் நடவடிக்கைகள் அவருக்கு எதிராகத் திரும்பின. உரோமன் கத்தோலிக்கப் பெண்ணை மணந்தமை, மற்றும் அவரது கத்தோலிக்கம் சார்பான கொள்கைகள் கரஞ்சீர்திருத்தச் சமயவாதிகள் (பியூரித்தான்கள்), மற்றும் கால்வினீஸ்து சீர்திருத்தவாதிகள் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள வைத்தன. ரிச்சார்டு மொன்டேகு, வில்லியம் லோட் போன்ற உயர் திருச்சபைத் தலைவர்களை அவர் ஆதரித்தாலும், முப்பதான்டுப் போரில் சீர்திருத்தவாதிகளின் சக்திகளுக்கு உதவத் தவறினார்.ஸ்காட்லாந்து திருச்சபையினர் ஆங்கிலிக்க நடைமுறைகளைப் பின்பற்ற சார்ல்ஸ் கட்டாயப்படுத்தியமை ஆயர்களின் போருக்கு வழிவகுத்தது. இவை அனைத்தும், ஆங்கிலேய, ஸ்காட்லாந்து நாடாளுமன்றங்களை வலுப்படுத்தவும், மற்றும் அவரது சொந்த வீழ்ச்சிக்குமே  உதவியது.
1642 முதல், இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் போது சார்ல்ஸ் ஆங்கிலேய, ஸ்காட்லாந்து நாடாளுமன்றங்களின் இராணுவத்தினருடன் போரில் ஈடுபட்டார். இப்போரில் 1645 ஆம் ஆண்டில் தோல்வியடைந்ததை அடுத்து, சார்ல்ஸ் ஸ்காட்லாந்துப் படையினரிடம் சரணடைந்தார். அவர்கள் அவரை இங்கிலாந்து நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்தனர். கடத்தியவர்களின் அரசியல் சட்ட முடியாட்சிக் கோரிக்கைக்கு சார்ல்ஸ் இணங்க மறுத்தார். 1647 நவம்பரில் சிறையில் இருந்து தப்பி வெளியேறினாலும், வைட்டுத் தீவில் மீண்டும் பிடிபட்டார். 1648 இறுதியில் ஆலிவர் கிராம்வெல்லின் புதிய முன்மாதிரியான இராணுவம் இங்கிலாந்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சார்ல்ஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1649 ஜனவரி 30 ல்  கோடரியால் தலை துண்டிக்கப்பட்டார் . இங்கிலாந்தில் முடியாட்சி அகற்றப்பட்டு, பொது  இங்கிலாந்து என்ற புதிய குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், 1660 இல் முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டு முதலாம் சார்லசுவின் மகன் இரண்டாம் சார்லஸ் அரசரானார். ஆனால் தற்போது உள்ள இளவரசர் பலதலை முறைகள் கடந்த அரச குடும்பத்தவர்.இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா!
இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸுக்கு சாதகமாக பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனை கிளாரன்ஸ் ஹவுஸ் அறிவித்தது. 71 வயதான இளவரசர்
சார்ல்ஸ் மற்றும் கமிலா இருவரும் இப்போது பால்மோரலில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். பக்கிங்ஹாம் அரண்மனை இது குறித்து குறிப்பிட்ட போது, மார்ச் 12 அன்று ராணி தனது மகனைப் பார்த்ததாகக் கூறினார், ஆனால் அவரும் ‘நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்’. என்று குறிப்பிட்டது.
மேலும், ராணி ‘அவரது உடல் நலன் தொடர்பாக பொருத்தமான அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றுகிறார்’ என்று அரண்மனை செய்திகள் குறிப்பிடுகின்றன. கிளாரன்ஸ் ஹவுஸ் அறிக்கையில், அரசாங்க மருத்துவ ஆலோசனைகளுக்கு இணங்க, இளவரசரும் டச்சஸும் இப்போது ஸ்காட்லாந்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ‘சோதனைகள் அபெர்டீன்ஷையரில் NHS ஆல் மேற்கொள்ளப் பட்டன.
இளவரசர் அண்மையில் தனது பொது வாழ்க்கையில், அதிக ஈடுபாடு காட்டினார். பலரை சந்தித்தார். எனவே எவரிடமிருந்து வைரஸ் பரவலாகியது எனக்  கண்டுபிடிக்க முடியாது. இளவரசரின் கடைசிப் பொது நிகழ்ச்சி மார்ச் 12 அன்று நடந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அவரும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் இருக்கிறார்.
ஹைக்ரோவ் மற்றும் டச்சி நபர்களுடன் அவர் பல தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தியதாக பத்திரிகை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தில் இப்போது 8,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் கேஸ்கள் உள்ளன – இருப்பினும் உண்மையான எண்ணிக்கையிலான கேஸ்கள் மிக அதிகமாக இருக்கலாம். அவர்களில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து இப்போது சோதனையான காலகட்டத்தில்.            லண்டன் நகரில்  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து அவரது மூத்த ஆலோசகர் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...