முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்காசி பகுதியில் ஒரு நவீன மோசடிக் கும்பல்

      தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த பல மாதமாக முன்பு முகாமிட்ட கும்பல் கிராமப்புற மக்களைக் குறிவைத்து களமிறங்கி முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி கொடுப்பதாகத் தெரிவித்து வலைவிரித்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் தங்கள் கம்பெனியில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டியைக் கொடுத்துள்ளனர். 
ஈரோட்டில் பிட்காயின் பெயரில் 
வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் தங்கள் நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைப்பதால் அதை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்ததை நம்பி அங்குள்ள  கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள்,அரசு அலுவலர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் அதிகமாக  வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தைச் செலுத்தியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் ஏஜெண்டுகளை நியமித்து பணத்தை வசூல் செய்திருக்கிறார்கள். அவர்களது கம்பெனியில் முதலீடு செய்பவர்களுக்கு தனியாக ஐடி நம்பர், பாஸ்வேர்டு உருவாக்கிக் கொடுத்துள்ளனர். குறைந்தபட்சமாக ரூ ஏழாயிரம் துவங்கி அதிகபட்சம் பதினேழு லட்ச ரூபாய் வரை பலரும் ஆர்வமாக விளக்கு தேடிவரும் விட்டில் பூச்சிகளாக  முதலீடு செய்திருக்கிறார்கள். 


தனிநபர் ஒருவர்  ரூ.2,80,000 பணத்தை முதலீடு செய்திருந்தால் அவர்களது வங்கிக் கணக்கில் தினமும் ரூ.1,456 செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதலீடு செய்தவர்களுக்கு கடந்த இரு மாதங்களாகப் பணம் கொடுத்துள்ளனர். அத்துடன், முதலீடு செய்வதற்கான நபர்களைச் சேர்த்து விட்டால் தனியாக கமிஷன் வழங்கப்பட்டிருக்கிறது.வலை பெரிதாகவிரித்து   காத்திருந்த 
இந்தக் கும்பலை நம்பி தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமத்தினர் 300 க்கும் அதிகமானோர் முதலீடு செய்துள்ளனர். இதுவரை இந்தப் பகுதியில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையில் தெரிவிக்கின்றனர். 
தொடர்ந்து வட்டிப் பணத்தை வங்கியில் செலுத்தி வந்த அந்த நிறுவனம் கடந்த சில வாரங்களாகப் பணத்தைக் கொடுக்கவில்லை. அதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த நிறுவனத்தினரைத் தொடர்பு கொண்டு பேசியபோதும் உரிய பதில் கிடைக்கவில்லையாதனால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் கவனத்து விபரம்  சென்றதும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சுமதி என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். 
இந்த மோசடி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதை அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், புளியங்குடி காவல்துறையிடம் புகார் அளிக்கத் திரண்டு வந்தார்கள். சுமதியிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராஜதுரை அவருடைய மனைவி ஸ்வேதா  மற்றும் இவரது கூட்டாளிகள் குட்டிமணி, கணேசன், தங்கராஜ், ரமேஷ், ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.
ஆன்லைன் வர்த்தகம் மூலம்  வீட்டு உபயோக பொருட்கள் விற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய அவர்கள், தங்களது கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாகத் தெரிவித்து மோசடி செய்திருக்கிறார்கள். இந்தக் கும்பல் ஏற்கெனவே பிட்காயின் மோசடியில் சிக்கி கைதானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 
சுமதி என்பவர் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்களை இந்த மோசடிக் கும்பலிடம் முதலீடு செய்ய வைத்துள்ளார். அவரை நம்பிப் பணம் செலுத்தியவர்கள் தற்போது காவல்நிலையத்துக்குப் படையெடுத்து வருகிறார்கள். தலைமறைவாக உள்ள மோசடிக் கும்பல் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


கருத்துகள்