காலமானார் பரவை முனியம்மா தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76. கலைமாமணி விருது பெற்றவராவார்.சிறுநீரகங்கள் செயலிழப்பு,மற்றும் முதுமை காரணமாக. காலம்சென்றார்.அவரது நல்லடக்கத்தில் உறவினர்கள் நண்பர்கள் இருபது நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அவரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல்🌷
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்